ஸ்ரீவேங்கடேசாயநம:
திருப்பதிவேங்கடேஸ்வரர்
தேர்வண்டிக்கால் சரித்திரம்.
--------------------------
இஃது.
குன்றத்தூர் பெரியணக்கவிஞர்
குமாரர்
சுப்புராய அய்யர் இயற்றியது.
-------------------------------
சென்னை:
ஸ்ரீஅரி அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
--------------------------
1902
--------------
சாற்றுக்கவி.
-------------------
விருத்தம்.
நலமிகுஞ்சுக்குலச் சம்வச்சரம் புரட்டாசி
நற்றேதிமூன்று
நளினமிகுசுக்கிரவா ரந்துவாதேசியும்
நன்குதிருவோணமதிலே
அலர்மேலுமங்காசமெதனிரத்ததினுரு
ளானவண்டிச்சரித்திர
மதுகன்னடத்திலே முதியோருரைத்ததை
அம்புவியெலாமறியவே
குலமதிலுயர்ந்தவன் குன்றைமானகருளோன்
கோதிலாவெஜுர்வேதியன்
குணமிகும் லட்சுமினா ரணபூசுரன்றரு
குமாரன் சுப்ராயவையன்
நிலைபெறவே ஹரிபஜன கீர்த்தனமெனப்பாடி
லெக்ஷ்மினா ரணதேவர்முன்
நெடுனில மெலாம்புகழ வேயறங்கேற்றினார்
நீடூழிவாழியென்றே.
-----------------------------
திருப்பதியில் அரங்கேற்றியபோதுபாடிய
சாற்றுக்கவி
-------------
இஃது.
குன்றத்தூர் பெரியணக்கவிஞர் குமாரர்,
சுப்பராய அய்யர் இயற்றியது.
சீர்கொண்ட கலியுகசகாப்தம் நாலயிரஞ்
சேருந் தொளாயிரத்திற்
செப்புமெழுபத்தொன்ற கதிலேகக்குலவருட
ஜயமிகு மடந்தைமாதம்
பேர்கொண்ட முப்பதாந் தேதிகுருவாரம்
பிரங்கு தசமித்தினத்தில்
பிரசன்னவேங்கடர மணசுவாமி சன்னிதியிலே
பெருஜீயரனுமதியிலே
பார்கொண்ட கொங்கிற் குறுப்பவளனாட்டிலே
பண்புகுன்றாபுரம்வாழ்
பன்னுமெசுர்வேதியன்சுப்ராயபாரதிதன்
பாக்கியவிசே ஷத்தினாற்
றேர்கொண்டவண்டிச்சரித்திரக்காதையைத்
தீந்தமிட்கீர்தனமதாய்ச்
செய்தரங்கேற்றினார் ஸ்ரீனிவாசன்கிருபை
சிறந்து மிகவாழி யென்றே!
நிவிக்னமஸ்து
பாயிரம்
திருப்பதிவேங்கடேஸ்வரர்
தேர்வண்டிக்கால் சரித்திரம்
-----------------------
விக்னேஸ்வரர் தோத்திரம்
(௧) ஆசிரிய விருத்தம்
அம்புவியிலே சகலசம்பிரம மிகுத்திடும் அழகுமிகு பாகநகரம்
அதிலே ஒருபிராமணப்பதிவிரதை மைந்தனில் லாமலரிரைத்துதித்தேன்
கும்பிதனிலொருசுதனை யீன்றிடுவனாகிலக் குமாரனைத் தேர்வண்டியிற்
கொற்றவாய்தருகிறேன் பெற்றவளிவளென்று குவலயஞ் சொல்லவைப்பாய்
அம்புயக் கண்ணனே திருவேங்கடேசனே ஆதியேயென்றுவேண்ட
ஹரியதுவரந்தந்து சிறுவனைத்தேர்வண்டி யடியிலிட்டதன் மேல்வருங்
கம்பீரமானகதை யைப்பாகவதர்பஜனை கீர்த்தன மெனப்பாடவே
கேசவன்கீர்த்திவிசு வாசமங்களகரக் கணபதிபதந்தொழுததே.
பல்லவி.
கணபதினீயே யெனக்குப் - பக்கத்துணை வருவாயே.
அனுபல்லவி.
பணங்கொண்ட அரவக்கங் கணம்பெருந் தூயவே
கணங்கொண்டதேவர் சரணந்தொழுநேயனே, (கணபதி)
சரணங்கள்.
(௧) மோதகதரனே மூலாதார மூர்த்தியைங்கரனே
நீதம் விழையுஞ்சதுர் வேதம்பரவியலம்
போதரவுனையன்றி யாதரவெவர்சொல்லும் (கணபதி)
(௨) சாமரகர்ணா முக்கண்ணா சரச்சசிவர்ணா
தேமுக்கனி கரும்புந் தேங்காயதிரசமே
தாமெத்தவும் விரும்புந் தழைக்குமதகசமே (கணபதி)
(௩) அருகணிகீலா குன்றையகி லாம்பிகைபாலா
தரணிபுகழுமரதச் சக்கிரச்சரிதஞ் சொல்லக்
கருணைகொடுத்து-முற்றுங் காத்துரக்ஷியும்நல்லக் (கணபதி)
ஆழ்வார்தோத்திரம்
(௨) விருத்தம்
கருகூரம்புயமேனி கண்ணபிரான்றிருவடியைக் கருதிப்பாடத்
திருகூர்வேஞ்சிந்தை யினேன்றீவினையேன் ஜகவாரியினல்போலச்
சருகூரென்னும்படியே தத்தளிக்குந்தமியேஞ் சஞ்சலந்தீர்த்தாளுங்
குருகூராழ்வாருபயக் கோலபதாம்புயமலரைக் கும்பிட்டேனே.
(௨) தரு இராகம் பைரவி தாளம் ரூபக சாப்பு
பல்லவி
ஆழ்வார்திரு வடிகளே சரணம் சடகோபநம்
மாழ்வார்திரு வடிகளே சரணம்.
அனுபல்லவி
ஆழ்வாரடி-தாழ்வார்களை-யாழ்வார்வெகு-வாழ்கவே (ஆழ்)
௧. அதிசுந்திர மதிசந்திர நிதிமந்திர யதியிந்திர (ஆழ்)
௨.ஒருனாலா யிரமாகிய திருவாய்மொழிக் குருவாகிய (ஆழ்)
௩.சதமாயரி பதமுண்டென இதரத்துள மதகண்டன (ஆழ்)
௪.திடமாயரி யிடமேவுதற் கிடமாகிய சடகோபனம் (ஆழ்)
சரஸ்வதி தோத்திரம்
(௩) கலித்துறை
வெள்ளைக்கலைச்சி விதிநாவிடத்தி நன்வெண்கமலக்
கிள்ளைக்கரத்தி கீதாமிருகத்தி கிளிமொழிச்சி
எள்ளத்தனையு மிடராமல்வாக்கு யினிக்கவேயென்
உள்ளத்திருந்து உதவிசெய்வாளைய முத்தமியே
தரு - இராகம் - தோடி - தாளம் - ஆதி
பல்லவி
தாஎதனயனுக் கருள் தருவாய் சரசீருகமத்தில் வளர்
தாஎதனயனுக் கருள் தருவாய்
அனுபல்லவி
ஆயுமறையவன்றன் வாயில்வளர்நிதியே
நாயேன்சொல்லுங்கவிக்குட் டோயுஞ்சரஸ்வதியே (தாயே)
சரணங்கள்
(௧) வாணிமதுரமிகுஞ்சொல் வாணி வனஜாசனன்மருவிய
ராணி நளிநி நித்தியகல் யாணி
ஆணிமுத்தினப்பணி பூணிபுஸ்தகசுக பாணிவீணிபணி
வேணிதிராணிமிகுந் (தாயே)
(௨) ஏழுமலையவன்சரித்திரத்தை அடியேன்பஜனைகள்செய்து
நாளுந்துதிக்க நல்குவைவரத்தை
வாளெனும்விழிமயி லாளேயுனதுதிருத்
தாளென்சரணமெந்த வேளையுலுங்கிருபைசெய் (தாயே)
(௩) ஆறுமுகக்குமரனையடுத்தாய் அரன்செவியிற்ப்ரணவத்தைக்
கூறும்படியறுள் மிகக்கொடுத்தாய்
ஆரணியெனும்பரிபூரணியுனதிட காரம்புகலுமுன்
காரணம் நீயெந்தன் (தாயே)
அகிலாம்பிகைதுதி
(௪) விருத்தம்
செந்திருவளர்மார்பன் திருப்பதிவேங்கடேசன்
வந்தநல்லிரதவண்டி மகத்துவக்கதையைப்பாடச்
சந்ததம்மதுரவாக்குத் தப்பாமற்கொடுத்துரக்ஷி
சுந்தரிகுன்றைவூரிற் றுலங்ககிலாம்பநீயே.
(௪) தரு இராகம் மத்யமாவதி தாளம் அடசாப்பு
பல்லவி
அம்பாகிருபைசெய்குவாய் அகிலஜக
தம்பாகிருபைசெய்குவாய்.
அனுபல்லவி
வம்பார்மூலையிலே குன்டபுரியீசன்
வாமியெனும்பிராமிகிருபைசெயமனேமிநீசிவகாமிசுந்தரி (அம்)
சரணங்கள்
௧.வேதாகமவடிவே சச்சிதானந்த போதஞானமுடிவே
பூதபௌதிகனான பேதவுயிரைபெற்ற
பினிதையடியவர் மனதில்நடமிடு
வனஜபதயுகவனிதை யெனுந்திரிபுர (அம்பா)
௨.ஆதிபராசக்தியே ப்ரம்மானந்த
சோதிவடிவத்தியே பாதிமதினூத லோதிமமேகல்விப்
பாக்கியங்களைத் தேக்கியெனதிட வாக்கில்மதுரம்
தாக்கிகிருபைபுரி (அம்பா)
௩.மஞ்சார்குழல் மயிலே பஞ்சாக்ஷரப்
பஞ்சாம்வாழ்குயிலே நஞ்சார்மிடற்றரன் கொஞ்சுங்கிளியே
திவிய நளின நூபுர சரணமிருகசுப
கருணசாகரதருண திருபுவன (அம்பா)
சுப்பிரமணியர் துதி
(௫) விருத்தம்
மருமலர்த்துளவமாயன் வளர்திருவேங்கடேசன்
வருமிரதத்தின்வண்டி மகத்துவக்கதையைப்பாட
குருமுனிக்குபதேசித்த குமாரசற்குருவேயெந்தன்
அருகில்வந்துதவிசெய்து அனுதினங்காக்கவென்றே,
(௫) தரு -இராகம் காம்போதி - தாளம் ஆதி
வேலுமயிலனெக் காலுந்துணை செய்யவே-அதி
வீரதீரவடி வேலுமயிலெனக் காலுந்துணைசெய்யவே,
அனுபல்லவி
ஆலமருந்துதிரி சூலன்செவியினின்
மேலும்பிரணவந்தன் னாலேயருள்வடி (வேலும்)
சரணங்கள்
௧.ஆறுமுகமு மீறாருபுயமுடையோன் அமராடியவசுரரை
வேருகளைந்தகேம்பீர ஜெயமுடையோன்
பாரமிகுந்திடு ஆரமருவுமோய்
யாரன்மதுரையில் மாரனெனவந்த (வேலும்)
௨.தூயவரவர்க்குஞ்சகாயஞ்செய்யு முருகன்துளவொடுகவுஸ்துபமணி
மாயன்றனக்கதி னேயமிகுமருகன்
சேயனவன்கரங் கேயன்கரார்த்தி
கேயன்பத்தசகாயன் ஒளிர்விடு (வேலும்)
௩. பூமிபுகழ்சிவ காமிதருகுகனெ புரந்தானருள்குஞ்சரி
வாமியோடுகுரமாமகள் மணமகனே
ப்ரேமையோடுவந்து க்ஷேமங்கொடுத்தருள்
னேமன்கடைப்பையந் தாமன்சுந்தர (வேலும்)
ஆஞ்சநேயர் துதி
(௬) விருத்தம்
அஞ்சனைபாலனாகி யதிபலபீமனாகி
முஞ்செய் ராமாயணத்தும் மொழியம் பாரதத்தும் வந்து
கஞ்சநற்பதவிவேண்டுங் கருணைமாருதியைப்போற்றி
இஞ்சொலாலரிதேர்வண்டிச்சரித்திரமியம்பினேனே.
(௬) தரு-இராகம்-கலியாணி-தாளம்-அடதாளச்சாப்பு.
பல்லவி
நீயேதுணைவருவாய் ஆஞ்சநேய
நீயேதுணைவருவாய் (நீயே)
அனுபல்லவி
௧.காகுத்தன் றனையடுத்தாய் சீதையைத்தேடிக்
கண்டுகையாழி கொடுத்தாய்
வேகமாச்சஞ்சீவித் தியாகிநீயமேதாவிப்
போகிப்பரதற்காவி ஈயுநற்சிரஞ்சீவி (நீயே)
௨.பஞ்சவருடன்பிறந்தாய் பீமனெனவே
பாரோர்புகழ்ச்சிரந்தாய்
வஞ்சக்கௌரவரென்னும் பஞ்சைப்பரக்கவிட்ட
மிஞ்சும்பல மாருதி தஞ்சங்கிருபைவாரிதி (நீயே)
௩. தோத்திரஞ்சொல்லலறியேன் உன்கருணைக்கு
ஆத்திரமுள்ள சிறியேன்
கீர்திமருவ்ய்ம்வேங்க டாத்ரிவளரும்நல்ல
மூர்த்திரதச்சக்கிரத்தின் கீர்த்திகதையைச்சொல்ல (நீயே)
லக்ஷ்மி நாராயணசுவாமி துதி
(௭) விருத்தம்
அச்சுதன்வேங்கடேச ரனுக்கிரகமதனைப்பாரி
லுச்சிதமாகக்காட்டு ழுருட்சரிதத்தைப்பாடக்
கச்சணிமுலைப்பொன்மாதைக் கையுறத்தழுவிவாழும்
லக்ஷ்மிநாரணர்பொற்பாதம் னேசித்தேன்பூசித்தேனே.
(௭) தரு-இராகம்-சங்கராபரணம்-தாளம்-அடசாப்பு
பல்லவி
நாராயணவுன்னைநம்பினேன்
கோரதுரிதபரிஹாரவரதலக்ஷ்மி (நாராயண)
அனுபல்லவி
காரார்நிரங்கொள் சரீராவுயர்குன்றை
யூராதுளவணிமாராலக்ஷ்மி (நாராயண)
ஆலிலைதனிற்படுத்தோனே துரோபதைவேண்ட
அக்ஷயத்துகில்கொடுத் தோனே
ஞாலமதனை காலினாலேயளந்த
சீலவரவனவனு கூலராமவைகுந்த (நாரா)
கல்லைப்பெண்ணாக்கிய காயனே பாண்டவரைக்
காத்துரக்ஷித்தகோ பாலனே
பல்லுயிர்க்குயிராயே பரமாத்துமாநீயே
கல்வியைத்தருவாயே கருணாநிதியேலக்ஷ்மி (நாரா)
பக்ஷிவாகனப்பத்ம நாபனெகுன்றாபுரி
பாக்கியமடையுஞ்சொரூபனே
மச்சாவதாரகின வளர்வேதோத்தாரனே
மதகஜவரதனே மாரஜனகலக்ஷ்மி (நாரா)
ஸ்தல விசே ஷம்.
பூமகளுலவுமார்பன் புகழ்திருவேங்கடேசன்
றாமுருரதத்தின்வண்டிச் சரித்திரந்தமிழாற்செய்ய
நேயமோடரிதன்சேவை னேர்ந்த்ததென்பாக்கியமென்று
ஸ்வாமிபுஷ்கரணியான்றன் றகப்புளசாற்றினேனே.
(௮) தரு- இராகம்-கேதாரகொளம் - தாளம் - அடத்தாளச்சாப்பு
பல்லவி,
கண்டேன் கண்டேனே வேங்கடேசனை
கண்டேன் கண்டேனே ஆனந்தங் கொண்டேன் கொண்டேனே
அனுபல்லவி,
கண்டேனலர்மேலு மங்கைசமேதனைக்
கண்டேன் பக்தர்க்குக் கருணாப்ரசாதனைக் (கண்டே)
சரணங்கள்,
௧.கோவிந்தராஜர்பட் டணம்வந்துகூடியே
கூருமநரசிம்ம தீர்த்தத்தி லாடியே
கோவிந்தராஜரைக் கும்பிட்டுச்சூடியேக்
கோடுத்தபீபீனாச்சி யாரைக்கொண்டாடியே
கோசலனையருளபாலனை லட்சுணெனைக்
கோரியவடிவேலனை யருள்கபில்
ஈசத்திரிசூலனைப் பாலபிஷேகம்
என்றுஞ்செய்யனுகூலனை வணங்கியே
கோதிலாச்சதுர் வேதமோதிய வாதிமரையவ ரோதுமந்திர
மீதுசிந்தைவைத்தோதுகபிலக்கியாதிமிகுபுனல்மீதிலாடியே (கண்டேனே)
௨.சே ஷகிரிமுதலிற் றேவர்ச்சரணம்ரண்டு
திரமாங்காளிகோபுரத் தேங்காயுடைத்துண்டு
பாஷிங்கனரசிம்ம சாமியொருவருண்டு
பாதையிலேயேழு பர்வதமுடிவுண்டு
செம்பொன்விமானங்கொண்டு மண்டபம்பொன்னிற்
செய்ததெத்தலத்திலுண்டு கோபுரவாசல்
அம்பொற்படியுந்திரண்டு நின்றிடுஸ்தம்பம்
ஆனதுஞ்செம்பொன்கொண்டு விளங்கிடுஞ்
செழிக்கும் ஆதிவராக தீர்த்தமும் ஸ்வாமிபுஷ்கரணியென்னுந்தீர்த்தமும்,
அழுக்கறும்புனல் ஐவர்தீர்த்தமும் ஆனந்ததீர்த்தங்கள் ஹரிதன் பாதத்திற் (கண்டே)
௩.கோவிந்தாவெனச்சொல்லிக் கூறுமணியினாதங்
குறிப்பில்வந்தவர்க்கெல்லாங் கொடுப்பர்ஹரிதன்பாதஞ்
சேவைசெய்தவர்பலஞ் செப்பவெளிதேரவேதஞ்
சென்மசாபல்லியந் தீர்த்தமும்பிரசாதங்
கோடிபூஷணம்நித்தமும் சாளிக்கிராமங்
குல்லையாரமுஞ்சுத்தமும் சங்குசக்கிரஞ்
சூட்டுங்கரப்பிரசித்தமும் அபயமோடு
சொல்லும்வரதஹஸ்தமும் ரத்னகிரீடக்
குண்டலனை முகமண்டலனைப்பிரசண்டமிகுகோதண்டமருவியகொண்டல்
வண்ணனை மண்டலத்தில் வைகுண்டமென் நிலைகொண்டமூர்த்தியைக் (கண்டே)
௪. ஆதிவராகரையன்புடன் றெரிசித்து
அப்பால்ஸ்ரீநிவாச ரனுஞ்சைகொண்டுருசித்து
ஸ்ரீதரன்காணிக்கைகேசத்தியே அர்ச்சித்து
தீபாராதனைசேவைசெய்து ஸ்பரிசித்து
தீர்த்தங்கொடுக்கப்பெற்றேனே திருவடியென
சென்னிக்கனியலுற்றேனே ஹரிஹரியென்று
கீர்தனஞ்செமக்கற்றேனே யெனைப்பிடித்தக்
கிலேசம்போய்சுகமுற்றேனே பருவதம்விட்டு
அழகுமிகும் அலர்மேலுமங்கா அன்னையடி தொழுதென்னையருளிய
துளபமணிவெங்கடேசஸ்ரீஹரிதுணைவியாகிலாம்பிகையை யூர்வந்து(கண்டே)
லக்ஷிமி தோத்திரம்
கண்டமுதல்பால்பழமாங் கவிமழையைப்பொழியுமொரு
கொண்டகிலாம்பிகையைக் கும்பிட்டேயண்டர்தொழுந்
திருவேங்கடேச்சுரனைச் செந்தமிழாற்பஜநிக்கத்
தீருமகளையே துதிசெய்வேன்.
(௯) தரு-இராகம்-சங்கராபரணம்-அடதாளம்-சாப்பு
பல்லவி
லக்ஷ்மீவுனை நம்பினேன் சந்ததம்வித்தியா
லக்ஷ்மீவுனை நம்பினேன்.
அனுபல்லவி
லக்ஷ்மீவுனை நம்பினேன் நித்தியமெனவும்நானே
பக்ஷிவாஹனன்மான பாக்கியமிகுந்தேனே (லக்ஷ்மீ)
சரணங்கள்
ஸ்ரீலக்ஷ்மீ ஜெயலக்ஷ்மீ தேஜோலக்ஷண லக்ஷ்மீ
பூலக்ஷ்மீ புஜயலக்ஷ்மீ புத்திரபாக்கியலக்ஷ்மீ-லக்ஷ்மீ
கோலக்ஷ்மீ குணலக்ஷ்மீ கொடுக்குந்தருமலக்ஷ்மீ
மாலக்ஷ்மீ வரலக்ஷ்மீ வாக்கில்வளரும்லக்ஷ்மீ
சே ஷகிரியானைத் தினமும்மருவும் லக்ஷ்மீ
தாசன்சுப்ராயன் தமிழ்க்கருளும்லக்ஷ்மீ-லக்ஷ்மீ
மனதையுபசரித்தல்
(௧௦) விருத்தம்
திருமகளுலவுமிந்தச் செகந்தனுக்கரசனாகித்
தருமமேமுதலாயுள்ள சதுர்விதபலமும்பெற்றுப்
பரமபாகவதாள்போலப் பாக்கியமடைவாய்நெஞ்சே.
(௧௦) தரு-இராகம்-யமுனாகலியாணி-தாளம்-ஆதி
பல்லவி
பஜனைசெய்மனமே பஜனைசெய்வாயரி
பரமபுருஷனை நீபஜனைசெய்வாய்
அனுபல்லவி
பஜனைசெய்மனமே பஜனைசெய்வாய்ஹரி
பக்த்தவற்ச்சனைப் பஜனைசெய்வாய்
பஜனைசெய்மனமே பஜனைசெய்வாய்ஹரி
பாற்கடல்சயனனைப் பஜனைசெய்வாய்.(பஜனை)
சரணங்கள்
௧.சுஜனோத்தாரனைப் பஜனைசெய்வாய்நீ
துஷ்டசம்மாரனைப் பஜனைசெய்வாய்நீ
கெஜவரனைநீ பஜனைசெய்வாய்நீ
கௌரிதமயனைப் பஜனைசெய்வாய்நீ-பஜனை
௨.நந்தகுமாரனைப் பஜனைசெய்வாய்நீ
நவனீதசோரனைப் பஜனைசெய்வாய்
சுந்தரதேகனைப் பஜனைசெய்வாய்நீ
கமலவைபோகனைப் பஜனைசெய்வாய்-பஜனை
௩.சே ஷகிரீசனைப் பஜனைசெய்வாய்
திருப்பதிவாசனைப் பஜனைசெய்வாய்
பாஷ்யநரசிம்மனைப் பஜனைசெய்வாய்பஞ்ச
பாண்டவர்மித்திரனைப் பஜனைசெய்வாய்-பஜனை
(௧௧) தரு-இராகம்-சங்கராபரணம்-தாளம்-அட-சாப்பு
பல்லவி
கிருஷ்ணாமிருதம் புஜி மானகோபால ஸ்ரீ கிருஷ்ணா.
அனுபல்லவி
கிருஷ்ணாமிருதம் புஜித்திட்டால்பவப்பணி
விட்டுவிலகிச்சுக நிஷ்டைபெற்றிடுவாய்நீ (கிரு)
சரணங்கள்
௧.காமாதியில்முழுகாதே முழுகியே
பாமரனாயழுகா தே
ராமாதுளசியந் தாமரவிகுல
சோமா ஆயிரநாமாவெனச் சொல்லி(கிரு)
௨.ஆசாரத்தைமரக்காதே மறைத்தரி
பூஜாவிதிகுறைக் காதே
சே ஷயசயனஸ்ரீனி வாஸதாமோதர
கேஸவஹரிகம லாஸனபூஜித(கிரு)
௩. தேவாதிகட்கனுகூலனை நிசாசர
மாபாவிகள்குழகா லானைப்
பூவால்வடிதமிழ்ப் பாவாவருசித்து
நாவால்ஸ்ரீபத்ம னாபாவெனச்சொல்லி (கிரு)
௪. கோகுலம்வளர்த்தகோபாலனை சதாதியான
பாகவதர்க்கனு கூலனை
வாகுமிகுங்கோபி மார்களைமருவிய
ரோகிணிதினநீல மேகசொரூபஸ்ரீ(கிரு)
கதைப்புகட்சி
(௧௨) தரு-இராகம்-தன்னியாசி-தாளம்-ஆதி
பல்லவி
ஹரிரதச்சக்கிரநற் கதையே
அமுதமாம் ஸுமதையே
அனுபல்லவி.
பருவதம்சே ஷாச்சலமது பாரும்
பாற்கடல்சாமிபுஷ் கரணியைத்தேரும் (ஹரிரத)
சரணங்கள்
௧.தரிதிருப்பதியே சரிவளமாம்பூ
தலப்பெருமையே தாம்பூ
கருசன்மாகவே தாசரும்ராஜருங்
கடைந்துயெடுப்பதுண்டு காரணமதுகண்டு(ஹரிரத)
௨. அந்தவமுதில்னிதஞ் சிந்தையில்லாலவரே
அதற்பிறந்திடும் விஷமாம்
அந்தவிடந்த்தனையுஞ் சிந்தவிடாமலே
அரன்கொண்டதும் ஹருஷமாம் (ஹரிரத)
௩. அமுதைத்திருடும் அசுரனனைப்போ லரிவைசுதன்
அடையிலரிவரிக்கண் றுரைத்தால்
சுமந்துபெத்துப் பின்மவந்தா ளவள்மேற்றேர்
தூண்டியரிவளை யாண்டிடு வதுனேர் (ஹரிரத)
௪.ஸ்ரீனிவாச கோஹினி கிருபைக்கரத்தால்
சிறுஜகவி புதர்பெருவார்
ஆனந்தமுடனந்த வமுதத்தையுண்டார்
அரசாயவரே ஹரிபதங் கண்டார் (ஹரிரத)
ஸ்ரீனிவாசர் துதி
(௧௩) விருத்தம்
ஞானமுமறியேனுன்னை நவின்றிட வறியேன்றாக
கானமுமறிவேனுந்தன் கதைப்பொழிப்பறியேன்சொல்லி
தானமுமறியேன் யான்சொற்றமிட்பிழை யறியேனையா
ஸ்ரீனிவாஸனெநீயெந்தன் சித்தமே குடிகொள்வாயே.
(௧௩) தரு-இராகம்-சுருட்டி-தாளம்-ஆதி
பல்லவி
ஸ்ரீனிவாசாநீயே உனைத்துதிக்க
ஞானம் அருள்வாயே (ஸ்ரீனிவா)
அனுபல்லவி
தீனரக்ஷக அஞ்ஞானபக்ஷகனே (ஸ்ரீனிவா)
சரணங்கள்
௧. நீலமேக தேக ரந்தராவைபோகா
ஆலின்மீதுசிறு பாலகனாகிவளர் சீளவேணுகோ
பாலகிருஷ்ணரெனுஞ் (ஸ்ரீனிவா)
௨.காளிகோபுரவென பாஷிய கர்த்தரென்கிறவனே
ஆழியெடுத்தவனே ஆழிபடுத்தவனே
ஆழிவிடுத்திலங்கை யாழிதடுத்தவனே (ஸ்ரீனிவா)
௩. பானுகோலிதேஜா திருப்பதி பிரசன்னவேங்கடராஜா
ஆனைகூவுமுறை தானேகேட்டுவந்
தோனையன்பர்பெரு மானெயின்பமிகு (ஸ்ரீனிவா)
அவையடக்கம்
(௧௨) விருத்தம்
படித்துளபுலவர்முன்னும் பரம்பாகவதாள்முன்னும்
கடித்திடுமடியார்முன்னும் நாயினேன்புஞ்சொலாலே
வடித்திடுதமிழால்வண்டி மகத்துவக்கதையைப்பாடல்
நடித்திடுமயில்முன்கோழி நடிப்பதற்முவமையாமே.
(௧௪) தரு-இராகம்-பைரவி-தாளம்-அடத்தாலச்சாப்பு
பல்லவி.
குற்றமே திருந்தாலும் உத்தமர்கள் திருத்திக்
குற்றம்செய்திடவேண்டுமே.
அனுபல்லவி
கர்த்தன் வெங்கடேசனை நித்தியந்துதிபண்ணப்
பத்தியால் நான்சொன்ன பனுவல்தனிலேயென்ன (குற்ற)
சரணங்கள்
௧.வேதபுராணங்க ளோதியறிந்ததில்லை
வெல்லும் லக்ஷணம் ஐந்தின் சொல்லையறிந்ததில்லை
மாதவனைத்துதிக்கும் மார்க்கம் அறிந்ததில்லை
வரத்திடிரைத்ததல்லால் ---------------- (குற்ற)
௨.விருத்தத்தியல்பறியேன் பொருத்ததியல்பறியேன்
மெச்சுரம்ராகதாளத்தின் உச்சிதமுமறியேன்
பருத்தபதங்கள் நன்றாய் உறைத்திடவுமறியேன்
பல்லவிசரணங்கள் சொல்லும்விதமறியேன் (குற்ற)
௩.ஸ்ரீனிவாசன்பதத்தைத் தியானஞ்செய்திடனானே
தேவியகிலாம்பிகை நாவில்நின்றிடத்தானே
மானிலத்தோர்துதிக்கும் வண்டிக்கதையின்தேனே
மழலைப்பிள்ளைகள்போலே யுளறினேனடியேனே (குற்ற)
(௧௫) தரு-கதாசங்கிர ஹத்துவார,
பாயிரம்.
இராகம்-கரகரப்பிரியா -தாளம்-ஆதி
பல்லவி
ஸ்ரீ.
ஹரியைப்பஜனைசெய்வீர் சத்தம்
ஹரியைப்பஜனைசெய்வீர்,
அனுபல்லவி.
கரியஞ்சனுமே முறையிடவுடனே
விரைவினில்வந்தே யருளதுதருமமூற (ஸ்ரீஹரி)
சரணங்கள்.
௧. துரோபதிதுகிலைப் பாபிகளுரியவே
கூப்பிட்டாளரியென்றோர்பேச்சே யவள்
சோபந்தணியப் பிரதாபவிசித்திரவர்ணத்
துகிலொன்றக்ஷய மாச்சே (ஸ்ரீஹரி)
௨. இரணியநமவென் றியம்பெனக்கனகன்
எத்தனைதெண்டனைவிதித்தான் அந்தப்
பிரகலாதன்வேண்ட நரஹரிகம்பத்திலப்
பிறந்துயிரணியனைச் சதித்தான் (ஸ்ரீஹரி)
௩.தந்தைமடியிலிருக்க மகனைச்சிறு
தாய்முனியத்தகப்பன் விடுத்தான்பின்பு
அந்தச்சிறுவனும்வை குந்தனைநினைக்கவே
வந்துதுருவப்பட்டத்தைக் கொடுத்தான்(ஸ்ரீஹரி)
௪.தசமுகன்றம்பியை வகவிலக்கிடவே
தசரதராமனை யடுத்தான்அந்த
நிசிசுரர்களைக்கொன் றரசுவிபீஷணர்க்கன்று
ரகுபதியல்லவோ கொடுத்தான்(ஸ்ரீஹரி)
௫.துஷ்டரைக்கொல்வான் சிஷ்டரைப்புல்வான்
குக்ஷத்தில் மோக்ஷத்தைத் தருவான் பின்னும்
அஷ்டைசுவரியமும் வன்றரவல்லால்
ஆரினிக்கொடுத்திட வல்லார் (ஸ்ரீஹரி)
௬. மச்சக்கூர்மவராஹநரஹரீ வாமனராமவதாரம் சீதா
லக்ஷுமிராமன் பலராமகிருஷ்ணன்
கல்கியெனுந்தசாவ தாரன் (ஸ்ரீஹரி)
௭.சங்குசக்கிரம் சாரங்கம்வாள்கதை
தங்குபஞ்சாயுதபாணி நீல
மங்குலிந்தேகன் மலர்மகள்போகன்
மண்மகள்மருவுமோர் பாகன் (ஸ்ரீஹரி)
௮. ஆழியின்மேலும் ஆலிலைமேலும்
அறிவிலும் அடியவர்மனத்தும் எவ்
வேளையும்வசிப்பவன் விழிதுயில்ருசிப்பன்
வேண்டிடவருனெத்தி னத்தும் (ஸ்ரீஹரி)
௯.கருடவாகனன் கௌஸ்துவாபரணன்
கனகபீதாம்பரதாரி நல்ல
மருமிகுதுளசிமார்பன் கமிலைஸ்ரீ
வச்சனவைகுண்ட முராரி (ஸ்ரீஹரி)
௧௦. சே ஷகிரீசன் றுருப்பல்லவாசன்
ஜகத்தார்க்களுமுல்லாசன் ஹரி
தாசர்கள்போற்றும் வேங்கடரமணன்
தருமசொரூபன் விசுவாசன் (ஸ்ரீஹரி)
௧௧.கலியுகவரதன் காமித பலதன்
காரணக்கதைக ளெத்தனையோ அது
சொலத்திறளதொ வாயிரனாவான்
சொலப்பல யுகங்களெத்தனையோ (ஸ்ரீஹரி)
௧௨.ஆயினுஞ்சிறியேன் ஹரிச்சரித்திரமாம்
ஆழியிலங்கையினீர் போல்என்
வாயினாலரிரத வண்டிச்சரித்திரகதை
மகிழ்வேன்மழலை மொழிவார்போல (ஸ்ரீஹரி)
௧௩.ஒருவள்தன்மகன்மேல் ஹரிரதவண்டியை
ஒட்டியெழுப்புஞ் சரித்தி ரத்தைப்
புரந்தரதாசர்கன்னடக் கிருதியால்
புகலும்பண்டிய சரித்திரத்தை (ஸ்ரீஹரி)
௧௪.வளமிகுந்தமிழால் விளம்பெனப்புரியோர்
மகிழ்ந்துரைத்திடுமதினாலே யென்
னுளந்தனிலரிகிருபை வளந்திடவடியேன்
உரைத்தேன்பஜனைக்கென்றுப்பாலே (ஸ்ரீஹரி)
௧௫.வேடன்மராமரவென்றான் ஒருஅஜா
மிளனுமனறாவென்றான் அதுபோல்
பாடினென்றமிழால் வண்டிச்சரித்திரத்தைப்
பஜனிக்கஹரிகிருபை னன்றாம் (ஸ்ரீஹரி)
௧௬.ஸ்ரீவேங்கடகிரி னாராயணஹரி
திவியச்சரிதைக்கேளும் இந்தப்
பாரினிலெவற்கும் பாக்கியங்கொடுத்துப்
பதவியுங்கொடுப்பதென் னாளும் (ஸ்ரீஹரி)
------------------
(௧௬) - கதாசங்கிரஹம்-துவானா
ராகம் கரகரப்பிரியா தாளம் ஆதி
பல்லவி,
தேருருட்டக் கதையிதுவே கேட்டிடத்
தேகுட்டாததிது மதுவே,
அனுபல்லவி,
நாரிதன்மகன்மேல்த் தேரைநடத்தியகு
மாரனையெழுப்புமு ராரிதனதுதிருத் (தேருருட்)
சரணங்கள்,
௧. திருவளர்பாகாநகரத்திற்செழிக்குந்
தேன்மொழியாளொருமாது,
௨. அருவையர் கரசீ யழகிலவளெஸ்ரீ
அருந்ததியவட்கிணையோது
௩.காக்பகோத்திரப் பூசுரன்
றனதிடகாதலியவட்கிணையாரு
அரிதாசருக்கனுதினம்போஜன
முதவுவள்தருமசீலையவள்பேரு.
௪. மைந்தனில்லாமல்மனம்வருந்
திடிவாள்வயதொருமுப்பதுமாச்சு
அவள்சிந்தையிலரியைத்தியானமேசெய்து
செப்பினவளுமோர்பேச்சு.
௫.ஸ்ரீஹரிதேவாசின்மயரூபா
திருப்பதிவேங்கடரமணா
இந்தப்பாரினையளந்த பனிமலர்ச்சரணா
பாக்கிய லட்சுமீரமணா.
௬.காமிதபலதரிராஜவரதா
கனகபீதாம் பரதாரீ நல்ல
தாமரைக்கண்ணா தருமுகில்வண்ணா
சற்ஜனற்கருள் கிருபைவாரீ.
௭.செந்திருமார்பா திருப்பதிவேங்கடதேவா
என் றிருவயிற்றால் ஒருகந்தனைப்படைத்தால்
உந்தேர்வண்டிக்காலுக்கிடுவ
னென்றுநினைத்தாள்.
௮. புத்தனும் பெருநாகத்தினிற்
றள்ளாப் பெற்றால் போதும்
உத்தமவுந் தேர்வண்டிக்கிடுகிறேன்
உருதியிதுவென்றாள் மாது.
௧௦. இந்தப்படியே அவள் சிந்தையில் நினைத்தே
யிருந்தனள் அவள் தன்பர்த்தா ஒரு
மைந்தன் பிறக்கிற் கனகந்தனிற் பதுமை
வழங்குவேன் ஹரிக்கெனவுரைத்தான்.
௧௧. மாமனுமுறைப்பான் மகன்சுதன் படைத்தால்
மகிழ்வொடு வேப்பிலை தின்றே இந்தப்
பூமிபுகழுந்திருப் பதிமலைவந்துனைப்
பூசைபுரிகுவே னென்றாறே.
௧௨.மாமியும் வேண்டுவள் மருகள் வயிற்றில்
மைந்தன் பிறப்பதே யானால்
தாமரைக்கண்ணா தொட்டிலுஞ்சேயுந்
தருகிறேனென்றாள் தானாள்,
௧௩.அவரவர் மனதினில் நினைத்ததையெல்லாம்
ஹரியரியானோ கேளும்
இவள் கோரியதை எப்படித்தருவாள்
என்று அரியவளை யாளும்,
௧௪.கருணைசெய் தவளிட திருவயிரதநிற்
கருப்பந்தரிக்க அவள் கண்டாள்
தருமசீலையும் ஒருபதுதிங்களிற்
றனையனைப் பெற்றெடுத்துக்கொண்டாள்,
௧௫.ஜாதிமரபின்படி வேதியர்க் கெல்லாம்
தானம்பலவுந் தந்தார்கள்
வேதன்களோதியேஜாதகர்மாதிகள்
விதிவழியே புரிந்தார்கள்.
௧௬.செந்திருமார்பன் றிருவருளதனால்
செனித்த சிறுவனுக்குப் பேரு
அந்தணருரையால் வேங்கடரமணனென்
றழைத்தாரவர்களும் பாரு,
௧௭. பத்துமாசஞ்சென்றது புதல்வனுக்கு
பிரசன்னவேங்கடகிரிவாசன்
பெத்தவள் தனதிடநித்திரைதனில்வந்து
பேசுவர்சொர்ப்பனத்தீசன்,
௧௮. மகரமதியில் நீ மகவுவரங்கேட்டாய்
மங்கைவுன் மனக்குறை தீர்த்தோம்
பகருமுன்மொழிப்படித் தருவாயென்று
பாலன்வரும்வழியைப் பார்த்தோம்,
௧௯.அற்பிசிமாசத் துச்சவ ரதவண்டி
அடிக்குக் கொடுப்பாயுந்தன் சுதனை
சொற்படி பிரார்த்தனை செலுத்தெனச்சொன்னார்
சொப்பனத்திலே அச்சுதனே,
௨௦. நித்திரை தெளிந்தாள் நெடுமூச்செறிந்தாள்
நினைவுகலங்கினாள் மாது
பெற்றமகனைத்தேர் வண்டிக்கிட்டுஎப்படிப்
பிழைப்பேனென் றழுதாளப்போ,
௨௧, ஹரிதனைத்துதித்தாள் அருமைப்புதல்வனுக்கு
அணிமணிகளையலங்கரித்தாள்
பிரியமுடனே அதி சருசனமாகவே
பின்னுமகனையாதரித்தாள்,
௨௨, ஹரியும்வருடம் ஐந்தளவிலும் பொருத்தர்
அரிவையுந்தான் மிகமறந்தாள்
ஒருமகன்றன்றிருவயிறுவலிக்குதென்
றுரைத்தானவள்பரபரந்தாள்,
௨௩, வயித்தியர்பலபேர் வந்துகைபார்த்தார்
மாத்திரயவுஷதங் கொடுத்தார்
சயித்தியமென்றார் பயித்தியமென்றார்
தழைக்குப்ப்பிணியாற்கை விடுத்தார்,
௨௪, சோதிஷர் வந்தார் துர்திசையென்றார்
சுரகுரு பலமிலையென்றார்
ஆதிநவக்கிரஹ தோஷமென்றார்சிலர்
ஹரியைமறந்த திதுவென்றார்,
௨௫, ஆமிதுநிஜமென்றுரைத்தார் அப்பொழு
தவரவர்பிருது சேகரித்தார்
சுவாமிதிரு வேங்கடரமண வுன்ப்ரார்த்தனை
தருகுரோமேனவுந்த் தோத்தரித்தார்,
௨௬, திருப்பதியாத்திரைசெய்தார் கபிலத்
தீர்த்தத்தில் ஸ்நாநமுஞ்செய்தார்
அற்புத கோவிந்தராஜரைத் தொழுதார்
ஹரிசரணத்தைத் துதிசெய்தார்,
௨௭, காளிகோபுரங் கண்டார்பாஷியக்
காரரைத் தெரிசித்துக்கொண்டார்
யேழுபருவதமுங் கண்டார்வேங்கட
ஈசனிருப்பிடமுங்கண்டார்,
௨௮, சொர்ணவிமானமுஞ் சொர்ணமண்டபமும்
சொர்ணக் கலசகோபுரமும்
சொர்ணக் கபாடமும் சொர்ணதுவஜபடமும்
சொர்ணசபையின் விசித்திரமும்,
௨௯, கண்டார் ஆதிவராகரை சாமிபுஷ்
கரணியதிசியத்தைக் கண்டார்
கண்டார்மணியச் சந்தனரதத்தைக்
கண்டார்ஹரிசரண் கண்டார்,
௩௦. தாசர்கள்செய்யும்ஹாரி கோஷத்தைக்கண்டார்
தரும மஹாந்துவைக்கண்டார்
ராஜீக ஸ்ரீனிவாசரைக்கண்டார்
நல்கும் உத்திரவையுங்கொண்டார்,
௩௧, சன்னதிவந்தார் தனையனுந்தாயும்
தகப்பனும் அவனைப்பெற்றனரும்
சொர்பனப்பதுமையுந் தொட்டிற்குழவியுஞ்
சுவைமிகுவேப்பிலைத்துணரும்,
௩௨, காணிக்கைகொடுத்தார் மாமனும்மாமியுங்
கணவனும் இவர்களப்போது
வாணுதல்தரும சீலைமகனைத்தன்
மடிவிட்டிரக்கிலை யம்மாது,
௩௩,அருச்சனைசெய்தார் ஹாரதியெடுத்தார்
ஹரிதிருச் சேவையுஞ்செய்தார்
கர்ப்புடையவளரி விருப்புடையவளாய்க்
கருணைக்கடலைத் தெண்டஞ்செய்தார்,
௩௪, தருமசீலயுந் தனையனும்புருஷனுந்
தமருமொருமடத்தில் வசித்தார்
ஹரிதிருவிசித்திர ரதமதில் வருவதை
யாருஞ்சேவித்து மனமருசித்தார்,
௩௫,மாதுமகனை ரதவண்டியடியிற்றர
வாங்கவேஹமரிடம் பிடித்தார் அப்
போதும்சுதனைவண்டிக் கிடுகுடுகுடுவெனப்
பூரர்களும் வடம்பிடித்தார்,
௩௬, கோசாய் மடமுன்னூல் லாசரதமும்அதிக
குரூரமுடனே நின்றிடவே
தாசரும்பலபல பூசுரர்களும் அதி
தாபமுடனே நவின்றிடவே,
௩௭, ஹரியொருவர்தன்மேல் மருளதுகொடுத்தார்
அரிவையை மகனையும்பிடித்தார்
சிறுவனையெனதிட தேர்வண்டிக்கிட்டால்
திரும்புமி ரதமெனப்படித்தார்,
௩௮, அங்குளபெரியோரவளைமுனிந்தே
அறைகுவரவரவர்தானே
பங்கயக்கண்ணன் பிரார்த்தனை தவிர்த்தால்
பலயிடர்படுவர் மெய்தானே,
௩௯, காசினில்வீசங் காணியும்விடுக்கான்
காணிக்கைவாங்குவன் பேசி இந்த
ஸ்ரீசன்விடுவவனோ திருமகன் றன்னைச்
செலுத்துவைநீயடிதேரடி,
௪௦, என்றவர்வைதார் இவள்மணவாளனும்
ஏங்கினரவனைப்பெற்றனரும்
இன்றிதுகேட்டார் என்னடிபாவி
யென்றெழுந்தார்கள் மற்றெவரும்,
௪௧, மைந்தனைவண்டியிற் கொடுப்பாயென்றே
மறையவருரைப்பதைக் கண்டான்
கந்தனுந்தாயைக் கண்ணீர்துடைத்தென்ன
காரணமுறையென விண்டான்,
௪௨, மைந்தனைக்கையால் வாரியெடுத்தாள்
மதிமுகத்தினில் முத்தமிட்டாள்
கந்தனீ பிறந்தாலரிரதவண்டி
காலுக்கென்றதை மொழிந்திட்டாள்,
௪௩, சொன்னதைக்கேட்டான் சுதமகிழ்ந்துரைப்பான்
சுரபதிக்கெனைகொடுப்பாயே
இன்னமும் என்போற் சுதன்பெறுவாயரி
யின்கிருபையாலே யெந்தாயே,
௪௪, பிறப்பதும் இறப்பதும் பேருல கோற்கே
பெருவினையது துலையாது
சிறப்புடன் ஹரிபதம் பெறப்பலஜென்மத்திற்
செய்தபுண்ணியம் இதுபோதும்,
௪௫, எத்தனைநாளிருந்தாலுமண்ணுலகிற்
செத்திடுவதுபொய்யாது
பத்தர்கள் மனமதில் நிற்தமிடுமரிப
தத்தையடைகுவதே போதும்,
௪௬, தாய்பெற்றிடுவார் தாமுத்திடுவார்
தனையன்பெருங்கதியைத்தாளார்
நீயெனைபடைக்குமுன்னெறிமால்சதமென
நினைத்தாயுனக்கிணையாறார்,
௪௭, என்றுமகனுரைத்த நன்மொழிகேட்டாள்
இருவிழியிலும் புனல்சொரிய
நின்றுகண்மணியே யென்றுபுகலுமுன்
நேரமாகுதெனப்பெரிய,
௪௮, பூசுரரடுத்தார் யேசுடகொடுத்தார்
பூவைமகனைக்கயிலெடுத்தாள்
ஸ்ரீசனையடுத்தாள் சிறுவனைவிடுத்தாள்
தேரடியிலேவந்துபடுத்தாள்,
௪௯,மைந்தனையிடதுச்சக் கரத்திற்கொடுத்தாள்
வலதுசக்கரத்திற்றான்படுத்தாள்
அந்தணனொடுதாய் தந்தையுமதுகண்டு
அவருமூற்சையாய்ப்படுத்தார்,
௫௦, வலதுசக்கரத்தினில் வனிதையும் ஹரியை
வாழ்த்துத்துதித்து வசனிப்பாள்
ஜலஜனயநின் ப்ரார்த்தனைவட்டியின்
சகிதமிதெனப் பஜநிப்பாள்,
௫௧, மச்சவுருவெடுத்தாய் மறையினைக்கொடுத்தாய்
மறையவன்மனம் ருசித்திடவே
அச்சமில் கூர்மவதாரமதனாய
அமுதமெவரும் புசித்திடவே,
௫௨, ஸ்வேதவராகம் நீதானே பூமியைச்
சே ஷணையாதரித்தோனே
வாதுசெயிரணியன் றானெமடியவெ
வந்தனர ஹரியென் போனே,
௫௩, வாமனரூபத்தையெடுத்தாய்பூமியை
வாங்கிமாவலிக்கருள் கொடுத்தாய்
ராமவதாரத்தைப்பிடித்தாய் சூரிய
ராஜர்மணந்தவரைவிடுத்தாய்,
௫௪, ஸீதாராமவதார கௌசலை
தெசரதராஜகுமாரா
காதகராவணசம்மாரா பல
ராமகலப்பையணி சூரா,
௫௫, கோகுலமதிலேபிறந்தாய் பலபல
கோபிகள் புணரச் சிரந்தாய்
நாகத்துவசந்தன்னைக்கெடுத்தாய் பாண்டவர்
ராச்சியம்பெறமுடி கெடுத்தாய்,
௫௬, கல்கியதெச அவதாரா திருவேங்
கடாசலவாசா ஸ்ரீங்காராயென்
சொற்கிறங்கி யருளுவாயெ யெனதிட
துயரை விலக்கிரக்ஷிப்பாயே,
௫௭, பிள்ளை யைக்கொடுத்தாய் பெருமையையடைந்தேன்
பெற்றவயிருங்கொதித்திடவே
கொள்ளையடிப்பையென்று தெரிந்தாலிப்படிக்
கோருவேனோ சதித்திடவே,
௫௮, அன்றொரு வரங்கொடுத்தாயே அப்படி
இன்றொருவரங்கொடுப்பாயே
என்றும்புகழைப்பெருவாயே மைந்தனை
யெனக்குக்கொடுத்துரக்ஷிப்பாயே,
௫௯, மைந்தனுடனேநான் தான் வுனதிட
மலரடி தனிற்படுத்தேனே
இந்தரதத்தடியிற்றானே யிடரிட
யெண்ணலாமோ கனவானே,
௬௦, தேதொழில் நடத்துந் திறமுனக்கிலையோ
தேவாயினமுங்கற் கிலையோ
பார்த்திபன் றனக்குத் தேர்நடத்தியேபரி
பாவஞ்செய்தவனும்நீதானே.
௬௧, மடவியருடனே அடமதுசெய்வது
வழக்கமதுவுனக்குத்தானே
அடவியிற் பெண்களைத் துகிலைத்திருடிக்கொண்
டலையச்செய்தவனும்நீதானே,
௬௨, ஒருபதினாறாயிரமடவாருடன்
ஓராடியவுந்தன் பேச்சை
அருவைநான்சொல்லுவதெளிதோபாகவ
தாள்சொல்லுவாரந்தப்பேச்சை,
௬௩, ப்ருகுருஷி மனைவியைக்கொன்றவனென்றுனைப்
பேருலகோர்சொலப் பெற்றாய்
அகலிகை துரோபதைக் கருள்கொடுத்ததனால்
ஆபத்பாந்துவன்றுற்றாய்,
௬௪, படைப்பாய் கொடுப்பாய்கெடுப்பாயுலகைப்
பக்ஷித்துக் குஷியில் விடுப்பாய்
யெடுப்பாய் புவியைப் படுப்பாயாலில்
யெங்குமுன் மயமென அடுப்பாய்,
௬௫, யென்மகன்மேலேயிந்தரதத்தைநீ
யெளிதில்நடத்து வாயரியே
நின்மகிமை யிந்த நெடுநிலமறியவே
நிலைக்கச்செய்து அருள் புரியே,
௬௬, இப்படி ஹரிதிருபொற்பதந்துதித்தாள்
எழில்வேங்கடாசல ஈசனொரு
கற்பனைசெய்தார் கனகரதமகிமை
காசினியரியவுல்லாசன்,
௬௭, தாசர்கள் பஜனைசெய்ய கோஷமும் சங்கமும்
தவில்முறசுகளிவை முழங்க
மீசுரபேரி நகாரிகள்பூரிகள்
வீணைகின்னரிகள் மத்தளங்கள்,
௬௮, நாற்றிசையிலும்பல வாத்தியமுழங்கவே
ராஜரெவருமெய்த்திடவே
சூஸ்திரம்பிடித்திழித்தார்தாரைபூசுரர்
சுடர்முடிரதம் பின்னிட்டிடவே,
௬௯, காற்றொடுமழையிடி யாற்றதுபோலொரு
காரணங்கண்டிடக்கொடுத்தார்
சூஸ்திரம்மறையவர் விடுத்தார் ஹரிரதம்
சுதன்மேல்நடத்திடத்தொடுத்தார்,
௭௦, மடந்த்தைதன் மகன்மேல் நடந்தரதத்தையு
மகிலத்தோர்களுந்து தித்தார்
வடம்பிடி யாமலே மகரம்வரவே
மகத்துவஞ் சொல்லிக்குதிகுதித்தார்,
௭௧, கந்தனுமெழுந்தான்காரிகையெழுந்தாள்
கரிவரதனை நமஸ்கரித்தார்
அந்தணராஜர்கள் யாவருமறியவே
அவர் முதுகினிற் குரிதுரிதரித்தார்,
௭௨, தருமசீலயுந்தனயனும் ஹரியைத்
தியானமே செய்கிறபோது
சிறுவன்றகப்பனையும் பாட்டனும் பாட்டியும்
தேவரெழுப்பினரப்போது,
௭௩, மூவரும்யெழுந்தார்தேவனைப்பணிந்தார்
முகுந்தனைப் பலவிதந்துதித்தார்
தடவியேகுமரனைத் தழுவியேயெடுத்தார்
தாயின்குணத்தையும் சம்மதித்தார்,
௭௪, அங்குள்ள பெரியோ ரனுக்கிரஹங்கொண்டார்
ஹரிதிருச் சேவையுங்கொண்டார்
மங்கையைப்பணிந்தார் மானகர்வந்தார்
மறையவர் கன்னங்கொடுத்துண்டார்,
௭௫, மங்களம் ஸ்ரீவேங்கடாசலமூர்த்திக்கி
மங்களம் மடவிமகனுக்கும்
மங்களம் ஹரிபஜனைகள்செய்பவற்கும்
மங்களம் கேட்கும் சற்சனற்கும்.
௧௩-வது-விருத்தம்
திருப்பெருங் கதையைத்தானே செழித்தகீர்த்தனமேபாடத்
தருப்புகள் தழையநீயே சந்ததங்கருளைசெய்வாயே
அருப்புத மிகுந்தவெற்றி ஐங்கரமுடயதேவே.
௧, ஜெயவேங்கடகிரினாயகன் ஜெயலக்ஷ்மிரமணன் மிகு
ஜெயஹரிகீர்த்தனன் தமிழாற ஜெயம்பெறவே
ஜயமங்கள கௌரீசுதன் ஜெயமங்கையின் குமாரன்
ஜெயசங்கரி மருகன்கிருபை ஜெயமைங்கரன்துணையே.
௨, ஒருபிராம்மணி பெருமைந்தனை
உயர் வேங்கடரமணன் அவர்
வருதேர்வண்டி பெரக்கோரியவகைகீர்த்தனஞ்சொலவே-ஆ
ஹரிகேசவன் றிருனாபியஞ் சரசீருஹமலரோன் - பெரு
திருநாவினி னுறைவானியெத் தினமுங்கிருபை செயவே.
௩, கருமாமுகில்நிரமேவிய வண்ணன் கிருபைக்கண்ணன்
கிரிவேங்கடத் தலமேன்மையைக் கீர்த்தனமாய்ச்சொலவே
அருள்தங்கிய ஹரியிங்கித ஹனுமார் கருடனுமாமின்னம்
ஹரிசேவைசெய் யாழ்வார்கள் தன்னடியுந்துணைசெயவே.
௧௮-வது தரு-மங்களம்-இராகம்-சௌராட்டிரம்-தாளம்-ஆதி.
பல்லவி.
ஸ்ரீவேங்கடேசனுக்கு ஜெயமங்களம்-எங்கள்
சே ஷகிரிவாசனுக்கு சுபமங்களம். ஆ ஆ ஆ (ஸ்ரீவேங்க)
தேவாதிதேவனுக்கு செழும்பத்மனாபனுக்கு
மூவர்பரவும் ஆதிமூலமென்பவனுக்கு (ஸ்ரீவேங்க)
௧, தாமரைக்கண்ணனுக்கு ஜெயமங்களம்-அமுதைத்
தருமுகில் வண்ணனுக்கு சுபமங்களம் ஆ ஆ ஆ ஆ
பூமகள் மருவிய புண்ணியபுருஷனுக்கு
ஸ்வாமிபுஷ்கரணியாந்தடவாழ்ஹர்ஷனுக்கு (ஸ்ரீவேங்க)
௨, ஆதிவராகனுக்கு ஜெயமங்களம்-ஸ்ரீனி
வாச அதிபனுக்குச் சுபமங்களம் ஆ ஆ ஆ
கோதில்கோவிந்தராஜா கொண்டநாச்சியாருக்கும்
மாது அலர்மேல்மங்கைமனோன் மணிக்கும்-ஸ்ரீ (ஸ்ரீவெங்க)
௩,ஜீயர்திருமொழிக்கு ஜெயமங்களம் மஹாந்தா
சிஷ்ட அடியாருக்கு சுபமங்களம் ஆ ஆ ஆ
தாயின்மகனைத்தாண்டித் தாவித்தன்னிலை நிற்கும்
மாயன் ரதத்தின்பண்டி மகிமைக்கதையிதற்கும்
௪, பாத்தியுள்ளவருக்கு ஜெயமங்களம் பஜனைப்
பாடிக்கேட்பவருக்கு சுபமங்களம் ஆ ஆ ஆ ஆ
சத்தியகிலாம்பிகை தன்வாக்குத்தழைக்கவும்
பத்தன் சுப்ராயன் சொல் பஜனைத்தமிழ்செழிக்கவும்.
-----------
பாயிரம் முற்றுப்பெற்றது.
விருத்தம் - ௧௩.
தருக்கள் - ௧௮.
வேங்கடேசாயமங்களம்.
-------------
௧-வது விருத்தம்.
மணிகொண்டசிகரமும் மாளிகைவிசித்திரமும்
மகரதோரணவீதியும்
மறையவர் தெருக்களும் இறையவர் தெருக்களும்
வைசியர்மற்றுளமனைகளும்
அணிகொண்டதேர்வீதி யாவணங்களுமிலகு
அன்னசத்திரமளவிலா
ஆனைபரிசேனையொடு அரணவித்தாரமிகு
அழகுசெறிபாகனகரங்
கணிகொண்டதிருநகரி லொருதேதியன்மனைவி
கற்பின்மிகுதருமசீலைக்
கர்ப்பமில்லாமலவள் முப்பதாண்டளவுமே
கவலையுடனேவருந்தித்
துணிகொண்டதருமமொரு முப்பத்திரண்டையுஞ்
சோர்வுராமற்செய்திடச்
சுரர்பரவுவேங்கடேச சுரனருடருக்கதை
சொலக்கேட்க மிகுசுகுர்தமே
தரு-லாவணி-இராகம்-நாதநாமகிரியை-தாளம்-ஆதி
பல்லவி
நாளுந்தருமசீலையாளுஞ்செய்யரங்ளைக் கேளும்
கோழிகூவு மந்த வேளைவிழித்தெழுவள். கேளும்
பணிந்து ப்ராதஸ்நாநமுஞ்ச்செயக் கொடுப்பாள்
எதுநினைந் திடிமனுங் கெதிரிநிற் படைப்பாள்
இல்லிடை சமையல்செய் யியல்பளை முடிப்பாள்
பதுமனாப னுக்குப் புதுமலரெ டுப்பாள்
பதிகைகொடுத்துச்சாத்திடவகை தொடுப்பாள்
அதிதிகளுடன்பதியுணவனங் கொடுப்பாள்
அன்பன்பரிகலத்திலவளுமுண் டடுப்பாள் (கேளும்)
௨. புண்ணியபுராணகதைகளில் விசுவாசி
புருடனுடனேமிருதுவாகவே பேசி
எண்ணியபகல்கழித்திடுமக ராசி
இரவிலரியர்ச்சனைக்கியல்புசெய் தாசி
உண்ணியல்முடித்துதன்னுடயவன் யோசித்
துளதைநடத்தியவன்உறங்கப்பின் பாசி
தன்னிற்படுத்துறங்குவாள்மனங் கூசி
தான்முன்னெழுவளரிதியானத்தைப் பேசிக் (கேளும்)
௩.கற்பின்மிகு அருந்ததியிவள் தானே
கனமிகுபொருமையிற்பூலிந்தத் தேனே
பொற்பினின்மிகுயிலக்குமிமட மானே
புகழ்ப்பார்ப்பதியெனப்புகலுவார் தானே
புறப்புதக்குசமுடையவளறந் தானே
புரிந்துபுருஷனைப்பூசிப்பவள்மெய் தானே
விற்பனர்துதிசெய்யும்மெல்லியை நானே
விரித்தவள்குணம்விளம்பிடத்தெரி யேனே (கேளும்)
இப்படித்தருமசீலை யினிதுவாழ்ந்திடுமன்னாளில்
முப்பதுவயதுமாகி முத்தியாமகப்பேரின்றிப
பற்பலதருமமெல்லாம் பதியோடுங்கூடச்செய்த
வற்புதமதனையென்னாலறிந்தள வறைகுவேனே.
(௨) தரு-திபதை-இராகம்-காம்போதி-அடதாளச்சாப்பு
பல்லவி
௧. மைந்தனில்லாமல் வருந்தித்தவஞ்செய்த
மார்க்கமதைக் கேளும்-இந்த
வல்லியுமந்தணனும் புண்ணியதீர்த்தம்
மகிழ்ந்தாடினார் - நாளும்
௨. சிந்தைமகிழத்தெய்வஸ் தலம்யாவும்
தெரிசனஞ்செய்தார்கள்-அவர்
சீருடன் அன்னமும்வஸ்திரஞ்சொர்ணஞ்
சிறப்புடன்பெய்-தார்கள்
௩. வண்ணானைநாவிதனைத் தர்மவேலைக்கி
வைத்துநடத்தினர்கள்-சு
மங்கலிமார்க்குக்கா தோலையும்சேலையும்
வைத்துவளர்த்தினர்கள்
௪. தண்ணீரின்பந்தல் மடங்கள்தடங்களுஞ்
சத்திரமும் எடுப்பார் - வருந்
தாபிகட்கெண்ணையுஞ் சுண்ணமுந்தூரியும்
தர்ப்பணமுங்கொடுப்பார்
௫. ஆருமில்லாத அனாதிப்பிரேதம்
அறிந்தால் ஸமஸ்கரிப்பார் - பசு
வானதுரஞ்சிடக் கல்லுகள் புல்லுகள்
அங்கங்குசேகரிப்பார்.
௬.ஊரிறகுழந்தைகள் கோறுஞ்சிற்றுண்டிக
ளுண்டுபண்ணிக்கொடுப்பார்-கண்
ஊனமுள்ளோர்க்குக்கண் காணமருந்துக
ளாச்சிதமாய்க்கொடுப்பார்
௭.தன் மவயித்தியஞ் சிறைச்சோறுங்கன்னிகை
தானங்களுங்கொடுப்பார் பிறர்
தந்துயர்நீக்கியே ஷன்மதத்தார்கன்னந்
தாமே வுண்ணவிடுப்ப்பார்.
௮.நுன்மதியோர்பிடித் தாட்டுமுயிரைத்
துலையில்விடச்செய்யுவார்-இந்தத்
தொல்லுலகோர்க்குக் குழந்தைக்கிப்பாலுஞ்
சடுகக்கொடுத்துய்யுவார்
௯.பிள்ளையுண்டாகிப் பெருமடவாரைப்
பிரியமுடனாதரிப்பார் - ஏழைப்
பிள்ளைகளைவளர்த் துள்ளம்மகிழப்
பிசகாமலாதரிப்பார்
௧௦. வள்ளலெனும் வேங்கடாசலமூர்த்தி
மலரடிக்கன்புடையார்-இந்த
மண்டலந்தனிலே யில்லரமார்க்கம்
வழுவாதநன்னடையார்.
(௩) -விருத்தம்
பலபலவிரதம்பூண்டுபரிவொடு முடித்துவாழும்
அல்லியங்குழலியாட்கே அனுக்கிரஹம்செய்யவெண்ணிச்
சொல்லியல்வேங்கடேசன் செழுமறையவர்போல்வந்தார்.
அன்னதடையின்றி அளிப்பாய்யென்றந்தசொல்லு
அன்னந்தடைநடையா ளரிந்தடிசில்புரிந்துடனே
அன்னந்தடையிவருக் ககமகிழத்தந்தானே
தருமசீலையைப்பார்த்துந்தன் றனையனுமெங்கேயென்றார்
குறையதுவல்லால்வேறு குறையிலையென்றாளப்போ
மறையவர்புசிக்கேனென்று மருத்திவையுரைக்கலுற்றான்.
கண்ணிகள்,
மங்கயேன்றுசொன்னார் அந்தச்
சந்திரமுகிக்கேட்டுத் தாமரைச்சலம்போலே
தயங்கித்தவித்து நின்றாள்.
௨, தந்தேன்தண்டுலமிதைச் சமைத்துப்புசித்திடுவீர்
சுவாமிநீரென் றுரைத்தாள்
கந்தனில்லாதவர்கள் தந்தாலெதுவும்நாம்
கைக்கொள்ளோமென்றுரைத்தார்,
௩, எதும்வேண்டாமென்றீரே எளியாளுக்கொருகதி
யியம்பெனப் பணிந்தாளே
தீதில்லாதசொர்க்கம் சே யில்லாக்கில்லையென்றார்
தேன்மொழி தணிந்தாளே,
௪, புத்தெனும்நரகத்தைப்புல்லுவர் மகவில்லாப்
பூவையரதனாலே ஒரு
தத்துமகனாகிலும் பெற்றால்நரகமில்லைத்
தையலேயதன் மேலே,
௫, நீதருந்தானத்தை வேதியர்கொள்வது
நீதம் அவர்க்குதவானே
எதுஞ்சஞ்சலம்வேண்டாம் ஸ்ரீதரனைப்பணிவாய்
ஈகுவர்சுதன்றானே
௬, என்றுசொல்லியேமறையாளன் சென்றபின்பு
யேந்திழைதுயர் கதித்தாள்
நின்றெரிதழலுக்கு நெய்போலந்தணன்சொன்ன
நேர்மைநினைந்து கொதித்தாள்
தருமசீலையுமப்போது சஞ்சலக்கடலில்மூழ்கி
சிறுவனில்லாமற்றானே சிந்தையுங்கலங்கிவாடி
அரிதிருவேங்கடேசர டிதொழுதியம்புவாளே.
பல்லவி
என்னஜன்மங்கொடுத்தாய்ஹரிஹரி
இப்படியேன்விடுத்தாய்.
அனுபல்லவி,
பாரினிற்பிள்ளையில்லாதவளென்று பலர்சொல்லுக்கானேனே.
வழங்குமதனாலே மழலையஞ்
சொற்கேட்கி லின்பஞ்செவிக்கென்றுவேதமுஞ்
சொல்லும்புவிமேலே எனக் (கென்னஜன்மம்)
௨, அன்னத்தையுண்டு அலங்கிருதங்கொண்டு
அழகிற்சிறந்தேனே யெனை
அன்னையெனுஞ்சுதன் றன்னைப்பெறாதவள்
ஆகிப்பிறந்தேனே எனக் ( கென்னஜன்மம்)
௩, மைந்தன்பெறா வுதரந்தன்னைக்கொண்டகு
வாணாட்பெருஞ்சுமையே இந்த
மாவளப்பூமியிற் கோவளைப்பூச்சிக்கி
வாய்த்தவளைச்சுமையே எனக் (கென்னஜன்மம்)
௪, கந்தனைப்பெற்றெடுக்காத கரமுங்
கசடர்பெருங்கரமே இந்தக்
காசினிதன்னிலே ஆட்டின்கழுத்திலே
கானுங்களஸ்திரமே எனக் (கென்னஜன்மம்)
௫, பாலனைப்பெற்றதைப்பார்த்துமகிழாத
பாவிக்கண்ணின்றுணையே இந்தப்
பாரில்மயிர்ச்சிறை தோறும்நிறைந்து
பரவுங்கண்ணுக்கிணையே யெனக் (கென்னஜன்மம்)
௬, பிள்ளைசொற்கேளாத வள்ளிசெவித்துளை
யுள்ளதுடற்கனமே இந்தப்
பேருலகந்தன்னிற் சீரெலி தோண்டும்
பெருந்துளைக்கொப்பினமே எனக் (கென்னஜன்மம்)
௭, பாலகனில்லாத பாழுஞ்சரீரம்
பாரமாய்க்கள்ளி மரமும்வளர்ந்து
படைத்தல்பழவினையே - பூமி
பழுக்காதபாவனையேஎனக் ( கென்னஜன்மம்)
௮, மங்கலில்லாத மனைக்குட்பெருஞ்செல்வம்
வாய்த்திருந்தென்னபலம் தெய்வம்
மாத்திரமில்லாத க்ஷேத்திரக்கோயில்
வள்ளந்திருந்தென்ன நலம்எனக் (கென்னஜன்மம்)
௯. பெண்ணாய்ப்பிறந்திந்த மண்ணினில்யாரும்
பிழைசொல்லப்பெற்றேனே
கண்ணாவுனைப்பணிந் தோர்களைக்காக்கும்
கருணைமிகுந்தேனே எனக் ( கென்னஜென்மம்)
௧௦. அச்சுதானந்த கோவிந்தமுகுந்தனே
அண்டர்தொழும்ஈசனே திவ்ய
வக்ஷலக்ஷுமி வளருந்திருப்பதி
வாழும்ஸ்ரீனிவாசனேஎனக் ( கென்னஜன்மம்)
இந்தவாறழுதுவாடி யேந்திழைமனதுகூடி
அந்தணனுரையைநாடிஹரிஹரியென்றுபாடிச்
செந்திருவளருமார்பா திருப்பதிவெங்கடேசா
சந்ததிதருவாயென்று சாற்றுவாள்போற்றுவாளே
௫ தரு-இராகம்-செஞ்சுருட்டி-தாளம்-ரூபகசாப்பு
பல்லவி
மைந்தன்பெறவரம்நீ தருவாயேதிரு
வளர்வேங்கடகிரிமீதினில் வாழும்ஹரி நீயேஒரு (மைந்த)
அனுபல்லவி
௧,தேவாவுனைநம்பினேன் பத்மநாபா கஞ்சப்
பூவாள்மருவிய கௌதுபமார்பா
பூவையர்க்குள்ளே பாவியென்றென்னை
யேவிடாமலே தேவநீயொரு (மைந்த)
௨, மறையோர்க்கன்னந்ந்தர தூஷிக்கிறாரோ
முறையோற்பலபல பாஷிக்கிறாரோ
தரைமீதிந்தக்குறை தீர்த்தருள்புரிவாயரி
ஹரியேவொரு (மைந்த)
௩,பெற்றாரைச்சொர்க்கத்தார்என்கிறாரே பிள்ளை
யற்றாரைபவத்தா ரென்கிறாரே
புத்தாம்நரகத்தாள்வதை
யற்றானெனவுற்றார் சொல்ல (மைந்த)
௪,யெந்தன்குறையது தீர்த்தருளையா-வுனைச்
சந்தான கோபால னென்பதுபொய்யா
எந்தன்குலமுந்தழைத்திட
வுந்தன்பெயர் தந்தழைத்திட (மைந்த)
௫,மாயாஅன்பர் தமைக்காக்குஞ்சகாயா
வாயாதிருவுளவேங்கட ராயா
சேயாகிவந் தாயார்க்கருள்
தூயாவெனைத் தாயென்றிட (மைந்த)
கந்தனையுந்தேர்வண்டிக் காலுக்குக்கொடுப்பேனென்று
சிந்தயில்நினைத்தாளந்த தேன்மொழிகணவன்மாமன்
நன்நரிமுகுந்தாவென்று நண்ணுவரெண்னுவாரே.
கண்ணிகள்.
காரணத்தைச்சொல்லுகிறேன் காசினியீர் தேரும்
விற்பன்ன மவள் கொழுநன் வேண்டினதும் நன்றாம்
மெய்ப்புதல்வன் றானடையிற் போற்புதல்வன் என்றான்
௨,பத்தினியாள்மாமிசொன்ன பிரார்த்தனையைக் கேளும்
பரிந்துதொட்டிற் குழலிதரப்பகர்ந்திருந்தாள் நாளும்
உத்தமனாமவள்கொழுநன் உரைத்ததும் விசித்திரம்
உண்பதின்றியாத்திரையிற்றின்பதாய்நிம்பத் பத்திரம்
௩,இந்தவிதமாகவவர் சிந்தனைசெய் திருந்தார்
இத்தனையும்வேங்கடேசன் சித்தமதிற் றெரிந்தார்
கந்தனைவண்டியிற்றரவே காரிகைதான் கோருங்
கருத்தறிவோமெனஹரியுங் கருணைசெய்தார் பாரும்
தருமசீலையுன்கொடூர சபதமுமறிவோமென்று
ஹரியருள்கொடுத்தாரப்போ தரிவையுங்கற்பமானாள்
தெரியவேகருப்பசின்னை தெரிந்தளவியம்புவேனே
பல்லவி.
கெற்பம்படைத்தனளே தருமசீலை
கெற்பம்படைத்தனளே
அனுபல்லவி
கெற்பம்படைத்தன ளற்புதமாகிய
சற்பகிரீசன்செய் கற்பனையாகிய (கெற்பம்)
சரணங்கள்.
பாத்தொருமாதம் பகவானருளென்று
காத்திரமேதோ கனப்பது நன்றென்று
கீர்த்தமருவிய வெங்கடசால மூர்த்தியருளெனத்
தோத்திரஞ்செய்து நாத்திநங்கையர் சாத்திரம்
வேகுநேத்தியிதுமனப் பூர்த்தியெனச்சொல்லக் (கெற்பம்)
௨,மாதமிரண்டாச்சுதென்பா அவளுண்ணுஞ்
சாதம் மட்டாச்சுதென்பார்
கோதில்பலக்ஷ ணாதிகளூட்டுவார்
ஆதரவாய்ரத்ன ஹாரங்கள்பூட்டுவார்
சீதமதிமுகமும்வெளுத்திட மாதமூன்றென
மாதர்வழுத்திடத்தாதிமாதொடு சூதமாடியே
போதுபோக்குவள் மாதனாலிலே (கெற்பம் )
௩,திங்களைந்தானதுவே வயிற்றிற்
சில வுறுப்பானதுவே
மங்கையர்மங்கள மாமலர்சூட்டியே
வாகுள்ளகாப்பு வளைகள்கைக்கூட்டியே
திங்களாரிலேதுங்க வேதியர்தங்கள்வேதமு
ழங்கப்புஞ்சுவனங்கள் சீமந்தங்களிம்மட
மங்கையர்க்குநலங்கொளச்செய (கெற்பம்)
௪,சப்த்தமாசம்வரவேகிசிசுவும் சகலரூபம்வரவே
மைத்தயெட்டொன்பது மாசம்வளரவே
வரும்பத்துமாசத்தில் மங்கைதளரவே
கர்த்தனாகியவெங்கடாசல உத்தமன்கிருபைசெய்து
இவள்முப்பதுவயதினை யுற்றமேலொறு
புத்திரன்றனைப் பெற்றெடுக்கவே. (கெற்பம்)
ஆதரவுடன்வளர்ந்து அவனியிற்செனிக்கவேதான்
வேதனைமிகவுண்டாகி மெல்லியும்மயங்கிவாடித்
தாதியருடனேசொல்லித் தயங்குவாள்மயங்குவாளே.
பல்லவி.
அம்மம்மாயினி யென்னசெய்வேனடி
இந்தவேதனைக்குநான் அம்மம்மாயினி
அனுபல்லவி.
அம்மம்மா பெண்ஜென்மம்பாவி
பிரமன்படைத்த வன்மமிதுவோ (அம்மம்மா)
௧. மாதேயிதுகனவாதைதெரிந்தேனடிஇதுவரையில்சுதன்பெறும்
மாதரழுவதைச் சூதென்றிருந்தேனடி
யேதுனானிதுபோதுமேன்றுயறோதவேமுடியாது
பிரசவவேதையிது வெனவேதிரிந்தால்
நாதனிடமொரு போதுமருவேன் (அம்மம்மா)
௨.சற்றேயாகிலுஞ் சகிக்கவசமில்லை யென்தாதிமார்களே
மெத்தைமீதிலும் வசிக்கரசமில்லை
எத்தனைனேரஞ் செல்லுமோசத்துருப்பிள்ளை
கொல்லுமோ அத்தைநீ நிசஞ்சொல்லடி
பெத்துனான் காண்பதல்லடி (அம்மம்மா)
௩.ஆரைச்சதித்தனியாயஞ்செய்தேனோஹரிஹரியென்றேதுதிப்
போரைத்தூஷணம் புரிந்துவைதேனோ
ஆரணன்அகண்டபரி பூரணன்வேங்கடகிரி
நாரணனாகியஹரி ஓரஞ்செய்வானோஆதரி (அம்மம்மா)
பிரசவேதனைபொறாமற் பாங்கியரோடிச்சென்று
பிரியமுடன்மருத்துவந்துப் பெரியவன்தன்னைக்கூவக்
கருசனமாகவந்தக் காரிகைதான்வந்தாளே.
பல்லவி.
மருத்துவக்கிழவிவந்தாளே அந்த
மாதுபடுந்துயரேதென்றுகூரே
அனுபல்லவி.
௧, வருத்தமுடனேனடந்தோடியிங்கே
மாச்சப்படுவாள் கிட்டவந்துறையாடி
மருத்துவஞ்செய்வனென்றாடி முலை
வளர்ந்துடையில் விழுவதுடன்போராடி (மருத்துவ )
௨,நரைத்ததலையும் நடுநடுக்கக்கையில்
நழுவுஞ்சேலையிடையில் நடுக்குக்கொண்டுடுக்க
இறைக்குமிருமு லுக்குமெடுக்கப்புகை
யிலைச்சுருட்குடினாத்தமெவரையும் முடுக்க (மருத்துவ)
௩,கையிற்றடியொன்றெடுத்தூணிவாயிற்
கடித்தபுகையிலையோர் கரத்தினிற்பூணி
மெய்யுள்வளைந்திடு முக்கோணி பிள்ளை
வேதையிலுஞ்சிரிக்க விழைப்பளக்கொக்காணி (மருத்துவ)
௪,பதறாதேநீயென்று அடுப்பாள்தொட்டுப்
பார்க்கிரேனிறுயென்று பாவையைத்தடுப்பாள்
அதுக்குள் ளோருவசனந் தொடுப்பாள் இது
ஆண்பிள்ளையென்றுதன் அரைச்சீலையுடுப்பாள் (மருத்துவ)
௫, இனிநீபயப்படாதேயென்பால்வெத்
திலைபாக்குக்கிராம்பெல்லாம் யினட்குமுன்தின்பாள்
வனமூலிகையிது பாரென்பாள் அந்த
வரதவெங்கடேசனை வாழ்த்து நீயென்பள் (மருத்துவ)
பொறுத்திடமாட்டேனென்று பூவையும்புகலத்தாச்சி
சிரித்துஉன்கணவனோடு சேர்ந்ததெப்படிநீயென்றாள்
கருப்புடையவள்சிரிக்கக் கடினமாய்நொந்ததன்றே.
பல்லவி.
வயிர்வலிக்குதுதாயே செய்யும்
வகையைநீசொல்லுவாயே வயிர்வலிக்குது
அனுபல்லவி.
துயர்விலக்கவந்தாயே நீயே
துணையெனைரட்சிப்பாயே (அடிவயிர்வலிக்குது)
சரணங்கள்.
௧. மருந்திருக்குதென்றாயே அதை
மகிழ்ந்துநீ கொடுப்பாயே
சரிந்தயெந்தனுதரந்தனிலொரு
பருந்துமோழன்றிருந்திருந்தடி (வயிர்)
௨.இடைசுடுக்குதுஅம்மா கண்ணுக்
கிருட்கொடுக்குது சும்மா
நடைதடுக்குது துடைகடுக்குது
படபடக்குது கிடுகிடுக்குது (வயிர்)
௩.இனிபொறுக்கமாட்டேனே இதற்கு
யென்னசெய்குவேன் நானே
வனஜனயனன் பன்னகசயனன்
றனதுமனதுற் பனமோயெனது (வயிர்)
தனஞ்செயக்குன்றாளான தையல்மேற்கருணைசெய்து
தனஞ்சையாற்றந்தபாலன் றரணியிர்பிறக்கவெண்ணத்
தனஞ்செயனுதைக்கப்பிள்ளை சலத்துடன்பிறந்ததன்றே.
கண்ணி.
நாமகரணம்விதித்தார் வேங்கட
ராவணனென்றே துதித்தார்
பிராமணற்கனங்கொடுத்தார் தெக்ஷணை
பரிந்துகொடுக்கத்தொடுத்தார்
௧௩ விருத்தம் .
மட்டிலாவிலைகொள் தொட்டிலிட்டனளே
பல்லவி.
தொட்டிலிட்டவள்பாடினாள் பாலகன்றன்னைக்
கட்டிமுத்தமிட் டாடினாள்.
அனுபல்லவி.
கட்டிப்பொன்னிற்சமைத்தமட்டில்லாவழக்குற்ற (தொட்டி )
௧. பாலகனுக்கலங்கரித்தாள் அனேகபுஷ்
பங்களைச் சேகரித்தாள்
ஆலமமுதமெனும் வேலார்விழியர்கூடிக்
கோலாகலவெ நாலாவிதமும்பாடி (தொட்டி)
௨.மங்கையர்பலர் கூடினார்ஜோஜோவென்று
மகிழ்ந்துமிகவும் பாடினார்
குங்குமமுங்களபங்களும் வழங்கினார்
சங்கீதமேளங்கள் சகலமுமுழக்கின (தொட்டி)
௩.முத்தினாரத்தியெடுத்தார் திஷ்டிசுத்தியே
முன்றில்தனிலே விடுத்தார்
கற்தன்வேங்கடகிரி கமலனாபமுராரி
பத்தர்க்கருளும்வாரி பரமாத்துமாவைக்கோரித் (தொட்டி)
க௩. தரு இராகம் ஆனந்தபைரவி சாப்புதாளம்
லாலிமங்களநாயகா
லாலிபக்த சகாயகா ஹரிஹரீ
லாலிகமல னாயகா
௨.புத்திரவரமேகொடுத்தாய் சுமந்துனான்
பெற்றிடவும்நீ விடுத்தாய்
உத்தமனே யெனதுகுக்ஷி வருமகனை
நித்தியமும் நீயேரக்ஷி லாலி
௩.ஆலிலையிற் றுயிலுவாயே அகிலமொரு
காலிலேயளந்தநீயே
சூலிலேவளர்ந்த சேயே யெனதுமுலைப்
பாலிலேவளர்த்து வாயே லாலி
௪.தாசர்களால் லாசன்னீயே வைகுண்ட
வாச ரிஷி கேசவன்நீயே
சே ஷகிரி வாசன்நீயே பக்தவிசு
வாசஸ்ரீனி வாசன்னீயே லாலி
பத்தினி தருமசீலை பாலனுக் கெண்ணைவார்த்து
மெத்தவே முலைப்பாலூட்டி வெதுப்புநீர் முழுக்குமாட்டி
நித்திய மலங்கரித்து னேர்மையாய் வளர்த்தாளப்போ
பத்துமாதமு மேயாகப் பாவையோர் கனவுகண்டாள்
க௫ விருத்தம்
தெந்தனமாகவேண்டிச் சிறுவனைப்பெற்றோமென்றும்
சிந்தையுமகிழ்ந்தாயிப்போ திங்களோர்பத்துமாச்சு
வந்தவற்பிசிமாசத்தேர் வண்டியிற்கொடுப்பாய்பெண்ணே
கன்றினாள்வயிற்றைகையாற் கசக்கினாள்கரைந்துவாடி
நின்றுதன்மகனைக்கண்டு நெக்குநெக்குருகினொந்து
யின்றிச்செய்வதென்னென்றேம்பினாள் தேம்பினாளே
கண்ணிகள்.
தேம்பினாள் இந்தத்
துஷ்டதெய்வந்தனை யிஷ்டஞ்செய்தே னென்று
தேம்பினாள்
௨. இப்படிச்சொப்பனஞ் செப்பிவிடா னென்று
எண்ணினாள் இனி
எப்படி யப்பனை யொப்பிப்பதென் றழுங்
கண்ணினாள்
௩. வம்பாகவேண்டி வகைமோசம்போனே னென்
றழுதாள் எனக்
குன்பாதமேதுணை உண்டென்றரியைக் கை
தொழுதாள்
௪.தும்புருநாரத ரும்பர வுஞ்
சுரேசனே இந்தத்
துஷ்டக்கோரிக் கையை
விட்டெனையாளுஞ் சர்வே சனே
௫.பேதமை யென்பது மாதற்
கணிகல னல்லவோ அழும்
பெண்ணைக்கண்டா லெந்தப்
பேயுமிரங்குமே யல்லவோ
௬.காதலாய் வேண்டினேன் பாதகஞ் செய்யக்
கருத்துண்டோ பிள்ளைக்
காணிக்கைக் காகநல்
லாணிப்பொன் பிள்ளைக் கொறைப் புண்டோ
௭.பிள்ளைகொடுத்தென்னைக் கொள்ளையடிப்பது
தர்மமோ இந்தப்
பேதைக் கிரங்கியே
பாதுகாப்பனென் வர்மமோ
௮.கள்ளனைத்தேள் கொட்டுங் கொள்கைபோலானேனே
கர்த்தனே யென்னைக்
காருந் திருப்பதி
நாரணமூர்த்திப்ர சித்தனே
னினத்தொடுசொன்னாலப்போ தேவர்களும்வைவரென்று
வனிதையும் ஹரியைப்போற்றி வந்தனஞ்செய்துவந்தாள்
கனமுள்ளவற்பிசித்தேர்கடந்தபின்றிடங்கொண்டாளே
கண்ணிகள்.
க. கனவுநமது நினைவுதானென்று
கவலைவிடுத்தாளே பெற்ற
கந்தனைக்கண்டு தரிசனங்கொண்டு
களிப்போடெடுத்தாளே
௨.மையிட்டுப் பொட்டிட்டு வாரிமுடிந்து
மகனைமுத்தமிடுவாள் பின்பு
வாஞ்சையுடன் ரத்னக் காஞ்சனபூஷணம்
மைந்தன்புகழுத் திடுவாள்
௩.காலுக்குத்தண்டை கொலுசுஞ்சதங்கை
கனத்த யிடைக்கிடுவாள் கந்தன்
மேலுக்குமேலுள்ள சாலுவைபோர்த்து
பிறலக்கணியு மிடுவாள்
௪.முத்துக்கடுக்கனும் ரத்தினத்தொங்கல்
முருகுஞ்செவிக்கிடுவாள் நெற்றி
முப்பிறைச்சுட்டியும் பற்பலபூஷண
முற்றும்நிறைத்திடுவாள்
௫.முப்பதின்மேலெந்தன் கெற்பத்தில்வந்தனன்
முத்தென்னவேயெண்ணுவாள் அவள்
முப்பழம்சர்க்கரை யப்பமுந்தேனும்
முலையுங்கொடுத்துண்ணுவாள்
௬.பாலன் விளையாடுஞ் சீலத்தைக்கண்டு
பகர்கனவை மறந்தாள்ஹரி
பார்ப்போமிவளிட தாத்பரியமென்று
பதராமலே யிருந்தார்.
சிந்தையும்மகிழ்ந்தாள்மாயன் செப்புசொப்பனமறந்தாள்
ஐந்துவற்சரம்பொருத்தா ரப்புராஹரியும்பார்த்துக்
கந்தனுக்குற்றவியாதி கற்பித்தார்வெற்பித்தாரே.
நொண்டித்தரு கண்ணிகள்
க.அம்மாயெனக்கேதோ வயிர்வலி
யாகுதென்றனுயிர் போகுதென்றான்
யெம்மால்முடியாது எனைநீ
யெடுப்பையென்றான்கீழே விடுப்பையென்றான்
௨.படுப்பானெழுந்திருப்பான் அவன்வெகு
பாடுப்படுவான் கூப்பாடுமிடுவான்
சிடுப்பான் முகங்கடுப்பான் அடிக்கடி
கிணுங்கிடுவான் மிணுமிணுங்கிடுவான்
௩.பெருங்குரலிட்டழுவான் பலபல
பிவத்திடுவான் பதை பதைத்திடுவான்
மருங்கைப் பிடியுமென்பான் இங்கே
வயிற்றிலென்பான் றன்னி தயத்திலென்பான்
௪.பசிக்குதென்றே யழுவான் பால்தயிர்
பருகான் அன்னமும்பெருகானே
இசிக்குது நரம்பென்பான் இனிபிழைப்
பில்லையென்பா னுன்பிள்ளையல்லயென் பான்
௫.கசக்கிவயிற்றைப் பிசைவான் வாய்விட்டுக்
கதருவான் கால்களை யுதருவானே
வசைக்குப் பிறந்தேனென்பான் உடல்தன்னை
வளைத்திடுவான் பின்னுங்களைத்திடுவான்
(க௯) விருத்தம்.
நோயிதுபொறுக்கேனென்று நுவன்றழுபாலன்றன்னைத்
தாயெடுத்துமோந்து தடவியேதன்னாலான
காயமுஞ்சுக்கிற்காய க ஷாயமுங்கொடுத்தாள்சும்மா
மாயனார்மருந்தல்லாது வாங்குமோவயிற்றுநோவு.
(க௭) தரு இராகம்-சங்கராபரணம்-தாளம்-ஆதி.
நொண்டித்தரு கண்ணிகள்.
அறிந்தாரவர்பொரிந்தாரே பொரிந்தாரே
நன்னயமாகவுமே - வைத்தியரை
நாடியழைத்தார்வந்து கூடியழைத்தார்
௨, அவுஷதங்கொடுக்கலுற்றார் சுக்குத்திப்பிலி
அரைத்தமிளகதிம துரத்துடனே
எவளவோசரக்குவகை - தூதுவளை
யித்துடன்கண்டங்கத்திரி துத்தியுடனே
௩, கற்பங்க ஷாயங்களும் - லேகியங்
கணக்கில்லாமற்கொடுத்தா ரிணக்கமில்லை
வைக்குஞ்செந்தூரங்களும் - பஸ்பங்கள்
மாத்திரையுங்கொடுத்து பார்த்திடவே
௪, குணமில்லையெனத்தெளிந்தார் - இனியிதிற்
குணமில்லையெனவவர் முணகிக்கொண்டே
பணமிகப்பறித்துக்கொண்டார் - இதுஎன்னமோ
பாவமென்றார்கிரகத்தின் கோவமென்றார்
௫, வயித்தியர்களுமகன்றார் சோதிட
மறையவர்களையழைத் துறையுமென்றார்
வியத்தினிற்குருவென்றார் அஷ்டம
வீட்டிற் சனியிருந்து ஆட்டுதென்றார்
௬, ரோகாதிபன்பெலத்தான் இதிற்குஷி
ரோமென்பார்பின்பு யோகமென்பார்
ஆகாத்திசையிதென்பார் வருஷமோர்
ஆறுக்குமேற்பட நூறுக்கென்பார்
௭, நவக்கிரஹஜபஞ்செய்வார் - நக்ஷத்திர
நாமஞ்செய்வார்ஜப ஹோமஞ்செய்வார்
அபமிருத்துசாந்திசெய்வார் - சூரியநமஸ்
காரஞ்செய்வார்பரி ஹாரஞ்செய்வார்
௮, மறையவர்ஜபத்தினிலே - வயிர்வலி
வரவரபலக்குது குறைவில்லையே
இறையவன்செயலென்றார் இதுயினி
யெங்களால்முடியாது வெங்கடகிரி
௯, ஹரிதனைக்கோருமென்றார் முன்னாலே
அவரனுக்கிரஹத்தி லுற்பவமாகவே
சிறுவன்செனித்ததென்றார் தாய்தந்தை
தெரிந்தார்வேண்டின தரிந்தாரே
(௨௦) விருத்தம்.
சங்கடவயிற்றுனோவு தனையனைவருத்துதென்று
துங்கமாயரிக்குச்சொன்ன சொற்படிசேகரித்து
அங்கவர்திருப்பதிக்கு யாத்திரைப்புறப்பட்டாரே.
பல்லவி
யாத்திரைசெயவெழுந்தார் - திருப்பதி
யாத்திரைசெயவெழுந்தார்
அனுபல்லவி.
பிரார்த்தனைமறந்தோமென் றாத்திரமாகவே ( யாத்திரை)
கையில்மாமியும்வைத் தெய்தாள்
க்ஷணத்திலேவேப்பிலைனன்றாய் மனக்கத்தின்குரவனுங்
குணத்திதருமசீலைகுசப்பாலுங்குரவனும் (யாத்திரை )
௨.மறையோருண்டிடவிடுத்தார் யாத்திராதானம்
மழைபொழிந்தெனக் கொடுத்தார்
விரைவாயெழுந்துகூடி வேண்டும்பொருளைத்தேடி
ஹரிஹரியெனப்பாடி யானந்தமுடனாடி (யாத்திரை)
௩.பத்திமிகவுங்கொண்டாரே கோவிந்தராஜர்
பட்டணமதைக் கண்டாரே
அத்தலத்திலிருந்து ஹரியர்ச்சனைபுரிந்து
சப்தகிரியைக்கண்டு தாமேதுதித்துக்கொண்டு (யாத்திரை)
ஸ்ரீவேங்கடாத்திரி திருப்பதித்தலமகிமை
செப்பவெளிதோ சிறியவன்
தினகரன்முன்மின்னி திரிந்ததெனயானிது
தெரிந்தமட் டுறைசெய்குவேன்
தேவர்கள்வனங்கிடுங் கோவிந்தராஜரும்
ஸ்ரீபூமி தேவியாரும்
தேடிஹரிவைத்திடுஞ் சூடிதருனாச்சியும்
ஸ்ரீராம லட்சுமணருங்
கோபுரப்பிரகார கோயிலின்விசாலமுங்
கோசாய் மடத்தினழகுங்
கோதில்வேதியர்நானா சாதியர்தெருக்களுங்
குறைவிலா நந்தவனமும்
வாவிகூபங்களொடு மண்டபவளங்களும்
மகரதோரணவீதியும்
மாமகளுலாவுமிவ் வளமுளதிருப்பதியே
வைகுண்டம் வைகுண்டமே.
(௨௨) விருத்தம் - தீர்த்தவிசே ஷம்.
கபிலமாதீர்த்தமுங் கணப்பிரம்மதீர்த்தமுங்
கருணைமா விஷ்ணுதீர்த்தம்
காமுருமயேச்சுரத் தீர்த்தமவச்சிரதீர்த்தம்
கண்டிடும் வசிட்டதீர்த்தம்
கவலையதுவிலகிடுஞ் சங்குசக்கிரதீர்த்தம்
கதைதீர்த்தம் பத்மதீர்த்தம்
கனநாகதீர்த்தமும் வில்வதீர்த்தம்பரசு
ராமகாருண்ணிய தீர்த்தம்
நவில்துராரோகணத் தீர்த்தமும்ஸ்ரீமஹா
நாராயணத் தீர்த்தமும்
நல்லபஞ்சாயுத தீர்த்தமுடனேநதியை
நல்கிடும் வறாகதீர்த்தம்
திவலைபடில்முத்தியாஞ் சே ஷதீர்த்தம்எனவே
செப்புபதினெண் தீர்த்தமும்
தேவர்கபிலேச்சுரன் கபிலமகரிஷிவளர்
திருப்பதியே வைகுண்டமே.
(௨௩) அகவல்-கிரிவிசே ஷம்.
க, ஹரிதிருச்சரணாம்புஜமலர்தொழுதே
பர்வதவளத்தைப் பகருவேன்கேளும்
௨,சே ஷமாமலையுஞ் சிறப்புடனுயர்ந்த
பூசுரர்வேதப் புகழ்மிகுமலையும்
௩, கெருடமாமலையுங் கீர்த்திசேர்நல்ல
அருளதுகொடுக்கும் அஞ்சனகிரியும்
௪, விருஷபமாமலையும் வேதவேதாந்த
ரசனையேமிகுந்த நாராயணகிரியும்
௫, வேங்கடாசலமுமாய் விளங்குமோர்சைலம்
பாங்குடனேழு மகிழ்ந்திடவெளிதோ
௬, மலைவளமெல்லாம் மகுழ்ந்திடவெளிதோ
சிலசிலசொல்வேன் தெரிந்தமட்டிலுமே
௭, ஆனைசும்ஹரியும் அதியுறவாடும்
பூனையும்எலியும் புணர்ந்துறவாடும்
௮,மானோடுவேங்கையும் மருவியேனிற்கும்
தேனுவும்புலியுஞ் சேர்ந்துமேனிற்கும்
௯,சந்தனம்முதலாய்த்-தழைத்திடுதருவும்
பைந்துணற்கொடியும் - பரவியதென்கும்
க௦, மல்லிகைமுதலாய்-வாய்ந்தநன்மலரும்
சொல்லியதுளசீ - சூழ்ந்தவனமும்
கக,மாமலர்பரவும் - வராகபுஷ்கரணியும்
சுவாமிபுஷ்கரணியாந் - தன்புனற்றடமும்
க௨,பாண்டவதீர்த்தமும் - பாபனாசனமும்
ஆண்டருள்கொடுக்கும் - ஆகாயகங்கையும்
க௩,அந்தரகங்கையும் - அறமதுமிகுந்த
நந்தவனஞ்சூழ்-ராமதீர்த்தமும்
க௪,கிருமியதுவில்லாக் - கிருஷ்ணமாதீர்த்தம்
குமாரதாரா-தீர்த்தமாங்குளமும்
க௫, தோஷமேவிலக்குந் - தும்புரூதீர்த்தமும்
ஷேமாதீர்த்தம்-தேவதீர்த்தமுமே
க௬,வைகுண்டதீர்த்தம் - வளர்சரசுவதியாம்
கைவலியச்சக்கிரக் - காரணதீர்த்தமும்
க௭,இப்படிதீர்த்தம் - எழுமாமலையில்
முப்பதிரட்டி-இருமூன்றுகோடியே
க௮,தீர்த்தமாமிதனைத் - தெரிந்தமட்டுரைத்தேன்
முத்தியாம்ஹரிசெய் - முகூர்த்தமுமுறைப்பேன்
க௯, ஷேமாமலையில் - சேவடிபதித்தார்
பாஷ்யநரசிம்ம - பதியுமாயுதித்தார்
௨௦, ஆதிவறாக - ஹரியவர்தானே
தீதிலாவந்த-க்ஷேத்திரபாலகரே
௨க, பாண்டவர்தன்னைப் பாதுகாத்தவரை
யாண்டவரெனவே யமைந்தவர்ஹரியே
௨௨,வேங்கடேசுவரராய் - மேதினியோர்க்குச்
சங்கடம்விலக்குந் தயாநிதியெனவே
௨௩,மூலமாஞ்சீனி வாசமூர்த்தியுமே
ஆலிலைதுயிலும் ஹரியவர்கண்டீர்
௨௪,உச்சிவசீனி வாஸராய்வருவார்
உயர்ந்திடுக்கொசீனிவாஸருமாவார்
௨௫,மெச்சிடும்போக சீனிவாஸருமிவரே
விமானமேர்சீனி வாஸருமிவரே
௨௬,தேவருமுனிவருஞ் செகத்துளதரசரும்
யாவரும்பரவும் ஆதிநாராயணன்
௨௭,ஆகாசராஜன் அழகுள்ளமகளை
விவாகமே செய்துவந்தகோபாலன்
௨௮,கட்டளைப்படிதன் - காணிக்கைகுறையில்
வட்டியிட்டுடனே - வாங்குமாமூர்த்தி
௨௯,திருவாய்மொழிக்கிச் - செவியதுகொடுப்பான்
ஹரியெனப்பணிவோர் - அகமதையெடுப்பான்
௩௦, அலர்மேலுமங்கா - அம்பாள்சமேதன்
பலசுரர்பணியும் - பங்கயப்பாதன்
௩க,சொர்ணமாமலையான் - சொர்ணமண்டபத்தான்
சொர்ணகோபுரத்தான் - சொர்ணதீர்த்தத்தான்
௩௨, அற்புதமகிமை அளவிடக்கூடாத்
திருப்பதிதன்னைச் -சிந்தையுற்றுதுதித்தே
௩௩,தருமசீலையுமவள் - தனையனும்பதியும்
அருமையாம்மாமி - யவள்பெருங்கணவனும்
௩௪, ஐவரும்வந்தார் - ஹரிஹரியென்றார்
செய்வதுயினிமேற் - செப்பிடக்கேளும்
காசிநிவரவும்உல்லாசமானவனைக் கண்டார்
க, ஸ்ரீபூமிதேவினாயகனை நாளுந்
தீனரக்ஷகதிவ்யக் ஞானதாயகனை
ஸ்ரீவச்சதேவமாதவனை மூன்று
ஜகத்தையும்வளார்க்குந்திரு மூர்த்தியாதவனைக் கண்டார்
௨, மாணிக்கமகுடமஸ்தகனை முத்தின்
வடமொடுகடககேயூரஹஸ்தகனை
வேணுவின்கானப்பிரியயனை தன்னை
வேண்டிமறந்தால்விடாதவைரியனை கண்டார்
௩,ஆகாசராஜபூசிதனை மிகு
அழகார்பத்மாவதி யணையும்போஷிதனை
பாகவதற்கருள்பகவனைப் பூமி
பாரத்தைச்சுமந்து ரக்ஷிக்கும்பகவனை கண்டார்
௪,காமிதபலங்கொண்டு பலனைவில்லுங்
கதைவாள்சக்கிரங் காத்தெடுப்பவனை
சுவாமிபுஷ்கரணியுள்ளவனைப் பல
தாசர்களாடச்சந்தோஷமுள்ளவனை கண்டார்
௫,தாமரைக்கண்ணனென்பவனைத் துளசி
சாளிக்கிறாமஹரத்தைத் தரித்திலங்குவனை
மாமறைப் பொருளாய்வந் தவனை-பக்தர்
மனத்திற்குடியிருந்து வரங்கள்தந்தவனைக் கண்டார்
௬,பக்ஷிவாகனனைப் பாவணனை இந்தப்
பாரோடியளந்த பாதபங்கஜனை
லக்ஷ்மிவேங்கடனாராயணனை இந்த
நேரிழைமகன்றன்னை நேருங்காரணனைக் கண்டார்
மாமனார்நிம்பபத்திரம் வைத்தடிவணங்கினார்கள்
தேமொழி தருமசீலைசிறுவனையிடையில்வைத்து
தாமிகவணங்கிநின்றாள் தனையனைக்கொடுத்திலாளே.
பல்லவி.
காரிகைதவிரமற்ற யாரும்
வேணுகானஸ்ரீ வேங்கடரமணர்கண்
காணவெதிரென்று கனகப்பதுமையென்னுங் (காணிக்கை)
க, பொன்னின்றொட்டிலுஞ்ச்சேயுங் கொடுத்தார் மையிற்
பூண்டவேப்பிலைத் தீனைவிடுத்தார்
பன்னகசயனனைப் பணிந்துபணிந்தடுத்தார்
பிரார்த்தனைசெலுத்தினோம் பாருமென்னத்தொடுத்தார் (காணிக்கை)
௨, பத்தினியாள்சொன்ன சொல்லை யங்கே
பகர்ந்தனளோசற்று மில்லை
மற்றவருடனந்த மங்கையும்வணங்கினாள்
வந்தொருதடத்தில் வசிக்கவுமிணங்கினாள் (காணிக்கை)
௩, ஐயர்முதலுள்ள ஆசாரியர் நாளுஞ்
செழிக்குமஹாந்தா வதிகாரர்
மாயனைதெரிசிக்க வாருமெனவேசொல்ல
வந்துதொழுதாரந்த வைபவமென்னசொல்லக் (காணிக்கை)
தடந்ததற்பிசியுமோண மாகியரதமுமன்று
திடமுறவலங்கரித்தார் தேன்மொழிமீதுதேவர்
ஹடமிகவிளைத்துக்கொண்டு ஹரியுமேரதத்தில்வந்தார்.
ரதத்திலேறினரே - சதுர்வித பதத்தில்மீறினரே
அனுபல்லவி.
சஹஸ்ரநாமமும்புகழ்ந்து புகழ்ந்தரிதாசர்களுங் கொண்டாடவே,
க, பூரிபேரிநகாரிதுந்துமி புணரியெனவதிற் கொலிக்கவே
புகலும்நாகசுரஞ்சகலவாத்தியம்புதுமைனவுமுற்பொலிக்கவே
பகரிவரசர்முராரி யெனவந்து பரவிகரத்தையஞ்ச லிக்கவே
பகரும்வேங்கடகிரிநாயகன்பரதசேவையும்பலிக்கவே (ரதத்தி)
௨, ரத்னமணிமுடிமஸ்தகத்தினில் நிலவுகதிரெனத் தயங்கவே
நிகரிபலபலசகலபூஷணம்நிறைந்த மயங்கவே
பத்தர்தனது இரதத்தின்சாமறை பரவியடிக்கடிக் கியங்கவே
பாசமகற்றயதாசராடியே பாடநாரதர் தியங்கவே (ரதத்தி)
௩, தாசர்கூட்டமும் ராஜர்கூட்டமும்சகலஜனங்களும்பெருக்கவே
தருணமெனஹரி சரணந்தரிசனந்தனக்குதருபவர் னெருக்கவே
ஸ்ரீனது ஆவேசங்கொண்டு சிலஜனங்கள் நடித்துக்கொண்டிருக்க
ஸ்ரீனிவாசரும்நாநாவலங்கிருதசித்ரரதத்தில்வந்திருக்கவே (ரதத்தி)
௪, குடைகள்சிலர்மலர் தொடைகள்சிலர் பலபடைகள்சிலர் பேர்
கொண்டுவருகவேபலபலவிருதுமடியவர்கொண்டுஹரியிடம்பெ
ருகவே கடலினிடைதுயிலுடையஹரியெனக்கனிந்தெவருமன்
பினுருகவேகருணைவேங்கடரமணன் றேறிற்காக்ஷியெவருக்குந் தருகவே (ரதத்தி)
ஹரிரதாரோஹணம் தானாரப்போ
தாசர்களும் அடியவரும் அளவில்லாத
பிரியமுடன்கற்பூர தீபங்காட்டிப்
பேருலகோர்சேவித்துப்பெருமையாகப்
பரிவட்டஞ்சந்தனமும் பலருங்கொண்டு
பார்த்திபற் தேங்காயுடைத்து பரவித்தொண்டு
புரிவரும் பூசரரும்வடத்தைக் கையிற்
பூண்டிட்டார்ரதம் நடக்கவேண்டிட்டாரே
(௨௨) தரு-இராகம்-மோஹனம்-தாளம்-ஆதி.
பல்லவி.
ரதமோடிவருகுதுபார் அதிசியமாகவே
வேங்கடேசரும் நீதமாயதின்மீதுலாவவே
அனுபல்லவி
விதவிதமாயலங் கிருதமதுகூடியே
பதிவிரதையுட சுதனையுந்தேடியே (ரதமோடி)
க, ஹரிதாசர்வடம்பிடித்தே
அடிக்கடி நடித்தே ஹரிஹரியென்று
ஆவல்தீரவே சேவைசெய்து
பிரியாமற்றுதி படித்தே பெருமையாகத்
திரைகடலொளியென முரசுகிடுகிடென
அரிவைமகனையென தடியிற்கொடுகொடென (ரதமோடி)
௨, சதுர்வேதம்முழங்கிடவே
கிருததீபஞ்சூழவே மறையவர் தன்னைத்
தாத்திமித்தாத்திமித் தாத்திம்மெனமிதித்
தாடிப்புளங்கிடவே விருதுகள்சூழ
வீரியடால்குடை சூரியபானொளி
மீறியமகுடசிங் காரமுடனே (ரதமோடி)
௩, மலர்மாரிசுரர்பொழியத்
திருவாயின்மொழியால் வந்தடியவர்
வாழ்த்திவேங்கட மூர்த்திகீர்த்தி வல
வீதிநல்லவழியால் கோசாய்மடமுனை
வந்தொருசந்திர விந்தைபுரிந்திட
அந்தணர்வந்து பணிந்து தெரிந்திட (ரதமோடி)
கோசாய்மடத்தின்மு னுல்லாசரதம்வந்து அதிக
குரூரமுடனே நிற்கவும்
ராஜாதிராஜரும் பூசுரரனேகரும்
அவ்விடமெடுத்திழுக்கத்
தாசர்களுல்லாசமொடு சன்னைகள்மிதிக்கவும்
சற்றுமசை விண்டுநிற்க
ஈசாயிதென்னவித மென்றுபெரியோர்களிவை
செப்புவா ரொப்புவாரே
௨௩-தரு-இராகம்-பைரவி-தாளம்-திரிபுடை
பல்லவி
கோபமென்னசொல்வாய்தேவா தேர்நடக்காத
கொள்கைசொல் மஹானுபாவா
அனுபல்லவி
பூவாள்வளரும்மார்பா புகழ்வேங்கடப்பிரதாபா (கோப)
சரணங்கள்.
வேதியர்குறைசெய்தாரோ ஓதேவனேவேதியர்
சாந்தவைசியர்குறையோ சரணமதிற்பிறந்த
தரணிமக்கள்செய்யுங்குறையோ
௨, பாந்தநல்லடியார்கள் பத்திக்குறைவுமுண்டோ
பணிவிடைக்குறைதானுண்டோ
ஏன்தானிப்படிவந்த தெளியோர்களும்வருந்தக் (கோப)
௩, பாலவிருதர்களெல்லாம் பசியாற்பரதவிக்கப்
பார்ப்பதழகோதேவனே ஓதேவனேபார்ப்ப
மூலஸ்ரீனிவாச மூர்த்திபூசையும்நிற்க
முறையோமாதவபூபனே
மேலேவெய்யலில்நின்று வேந்தர்களும் வருந்த
விதியோபதுமநாபனே
பாலாழியசயனனே பதுமநன்னயனே (கோப)
௪,சூத்திரம்பிடிக்காமற் சூத்திரம்பிடித்தோமே
சூத்திரதாரிநீயேகபடநாடக சூத்திரதாரிநீயே
பிரார்த்தனைக்குறைவுண்டோ பாவிகளெவருண்டோ
பாகவதர்செய்பிழையுண்டோ ஓதேவனே
பிரீதனேயெவர்மேலே பிழையுண்டோஉன்கையாலே
பிடிக்கமாட்டாயோமாவே ஓதேவ
கீர்த்திமருவும்வேங்க டாத்திரிவளர்மூர்த்தியே (கோப)
வேதியரெவருமிந்த விதத்தினிற்றுதிகள் செய்து
நீதிசேர்வெங்கடேச ரிதனைவணங்கும்போது
ஆதிநாரணனுமங்கோ ரந்தணன்றனதுமேலே
கோதிலாமருளைநன்றாய்க் கூட்டினாராட்டினாரே,
௨௪-தரு-இராகம்-கமாஸ்-தாளம்-ஆதி.
பல்லவி
ஸ்ரீசனது ஆவேசங்கொண்டவர் நடித்தார்
திருப்பதிவேங்கடரமண (ஸ்ரீசனது)
அனுபல்லவி
கேசரிபோலேவுல் லாசமாகவே (ஸ்ரீசனது)
க, சிந்தைமகிழவா னந்தநிர்த்தனமிடுவார்
திகுதிகெனவெரியும்நெய்ப்
பந்தங்களையுடலந்தனிர்ப்புணர்ந்திடுவார்
அந்தணரெவரையும் பிந்தவிலக்கிக்கொண்டு
கந்தனுடனிருந்த காரிகைதனைக்கண்டு (ஸ்ரீசனது)
௨,வாருமிவள்தனைப் பாருமெனவேபிடிப்பார்இந்த
மடந்தையைமகனுடன்
சேரப்பிடித்துதன் தேரினிடம்வந்துநடிப்பார்
கோரினபடியெகு மாரனைவண்டியில்
ஆருமறியத்தந்தாலத் தேரும்நடக்குமென்று (ஸ்ரீசனது)
௩, நாலுபேரிந்தப் பாலனைவரங்கேட்டார்இந்த
நாரிதவிரஅவ
ராலேசொன்னது போலஅடியில்நீட்ட
நாலெட்டுவயதிலிப் பாலன்படைத்தால்வண்டிக்
காலுக்கிடுவேனென்று ஜாலம்செய்கிறாளென்று (ஸ்ரீசனது)
பூசுரரனேகர்வந்து பூவையைமறித்துக்கொண்டு
தோஷிநீசொன்னவாறு சுதனைவண்டியிலேதந்து
ஈசனைவணங்கிப்போவேன் றேசுவார்பேசுவாரே.
பல்லவி.
வாசனுனைவிடுவேனோ
கூசாமற்பிள்ளையைக் கொடுப்பதாகச்சொல்லி
கூசினால்விடுவேனோ கொடுகொடென்கல்வி (ஈச)
க, இப்படியேனெண்ணினாய் பிள்ளையைபெற்று
கற்பனையேன்பண்ணினாய்
கற்புடையவளே நீ கவலையேன்படுகிறாய்
இப்புதல்வனைக்கையில் இனியேன்வைத்திருக்கிறாய் (ஈச)
௨,முடவன்ஹரியைவேண்டினான் குதிரையிற்பொன்
முடிப்புடன்வரத்தாண்டினான்
படவன்றனை நீயந்தப் பணத்தைப்பறிப்பையென்றான்
முடவன்றொடரப்பொன்னின்முடிப்பைக் கொண்டவன்சென்றான் (ஈச)
௩,கிழவிநெய்தரச்சாற்றினாள் காசாண்டிநெய்
முழுதும்விளக்கிட்டேற்றினாள்
கழுவாதுகிச்சடி காசாண்டியினிற்செய்தாள்
அழிவில்மண்டபத்திற்கண் டவளும்பல்லினைக்கெய்தாள் (ஈச)
௪,கோரும்வரத்தைக்கொடுப்பான்
குறையில்வட்டி யிட் டெடுப்பான்
நாரியேவுனதுகு மாரனைவிடுவானோ
மீரினாலுனைவட்டி சேரவென்றிடுவானோ (ஈச)
௫,ஆறும் அறியமாட்டாரே நீகோரின்
தரிந்துஹரியுங்கேட்டாரே
வாரிஜாஹனுங்கிருபை வைத்தாலின்னம்பெறுவாய்
கோரினபடியேகு மாரன்றனைத்தருவாய். (ஈச)
மைப்பொலிகுழலினாளை மைந்தனைவளைந்துக்கொண்டு
வெப்பறுந்தழலினாவெண்ணெய் விழுவல்போலுருகிவாடி
எப்படியினிமேலென்று இடிக்கின்றார்துடிக்கின்றாரே.
பல்லவி.
எதடிஇப்படி எண்ணினாய் - நீதான்
எப்போது பிரார்த்தனை பண்ணினாய்
அனுபல்லவி.
தீதென்றுகுறியாமல் சிறுக்கியாய்த்திரியாமல் (ஏதடி)
க, பாவிநீசொன்னதைப் பண்ணடீ கோ
பாலனைவேண்டின தென்னடீ இந்தத்
தேவன்றேர்வண்டியின் முன்னடி உந்தன்
செல்வனைக்கேட்கிரீர் தென்னடி
ஆவலால்நாங்களோர் மூவரும் வேண்டின
தல்லாமற்பிள்ளையை கொல்ல நீவேண்டின (ஏதடி)
௨,பிள்ளையைக்கொல்வது தன்மமோ அடி
பேயேவுனக்குப்பெண் ஜன்மமோ சும்மா
உள்ளதைச்சொல்லென்ன வன்மமோ உந்தன்
உள்ளவினையால்வந்த கன்மமோ
எள்ளளவாகிலும் எங்களையே ர்பேச்சு
விள்ளாமலல்லோ விபரீதம் வரலாச்சு (ஏதடி)
௩,தங்கப்பதுமையுந் தொட்டிலும் பசி
தாழ்ந்திட வேப்பிலை மட்டிலும் தின்று
மங்களமாம்ஸ்ரீனி வாசனைக் கண்டு
வந்தித்துதந்தோமுன் யோசனை
எங்களுக்கொன்றுந் தெரியாமற்போச்சுது
மங்கையேநாமு மயங்கிடாச்சுது (ஏதடி)
குணமிகுந்தருமசீலைக் கோதையுங்குனிந்துநின்று
மணமகன்றனையும்மாமன் மாமியார்தனையும்பார்த்து
இணைக்கயல்விழியினாளுமியம்புவாளியம்புவாளே.
கண்ணிகள்.
டேசனைப்பிள்ளையினாசையால் வேண்டினேன் பிராணநாதா
முன்னமோரந்தணன்அன்னமுண்பேனென்றுபிராணநாதா - உங்கள்
முன்னவர்சொன்னது மென்னமறந்ததோ பிராணநாதா
பிள்ளையில்லார்க்குப் பெருநரகென்றாரே பிராணநாதா - அந்தப்
பேச்சுக்காய்நானொருபேச்சுநினைத்தது பிராணநாதா
விள்ளவென்றாலும்மிகமனம்வாடுதே பிராணநாதா - இந்த
மேதினிதன்னில்மாபாதகியாகினேன் பிராணநாதா
பெற்றவளென்றுவுறைத்தால்போதுமென்று பிராணநாதா - நான்
பேதமையாநினைத்தோதினேனோர்மொழி பிராணநாதா
கர்த்தனாம்வேங்கட காரணன்றேரினிற் பிராணநாதா - வண்டிக்
காலுக்குத்தந்திடப்பாலனை வேண்டினேனே பிராணநாதா
தப்பாமற்கெர்ப்பந்தரித்திடக்கண்டனென் பிராணநாதா - பிள்ளை
தான்பிறந்திட்டபின் நான்மறந்தேனதைப் பிராணநாதா
சொப்பனங்கண்டது துக்கமிகுந்தது பிராணநாதா - அதைச்
சொன்னால்வைவீரென்றுஉன்னியிருந்தேன்நான் பிராணநாதா
அப்புறம்நானரி பொற்பதம் வேண்டினேன் பிராணநாதா - வய
தைந்துஅளவும்நிச் சிந்தையதாகினேன் பிராணநாதா
அப்பன்வயிறுவலிப்பதைக்கண்டோமே பிராணநாதா - நான்
யாத்திரைவந்தபின் பார்த்ததிலையேவலி பிராணநாதா
பிரார்த்தனைநீங்கள்செலுத்துமளவுமே பிராணநாதா - எந்தன்
பிரார்த்தனையெப்படிச்சேர்த்திடுவோமென்று பிராணநாதா
தோத்திரஞ்செய்தரி கீர்த்தனம்பாடினேன் பிராணநாதா - ஹரி
க்ஷாத்திரமாகவே தேர்த்தொழிபூண்டனர் பிராணநாதா
கண்டுபிடித்தென்னைக்கண்டிதஞ்செய்கிறார் பிராணநாதா - ஹரி
கற்பனைதானினியெப்படியோயெந்தன் பிராணநாதா
மண்டலத்தில்வசைகொண்டவளாகினேன் பிராணநாதா - எந்தன்
மைந்தனைஎப்படித்தந்திடுவேனையா பிராணநாதா
பெண்புத்தியாலேபிழைமோசம்போனேனே பிராணநாதா - இந்தப்
பேச்சுமகத்தான யேச்சுக்குள்ளாகினேன் பிராணநாதா
கண்மணிபாலன்செய்புண்ணியமென்னமோ பிராணநாதா - மிகு
காரணன்வேங்கடநாரணனேதுணை பிராணநாதா
பெற்றதாய்த்தந்தையாரும் பின்னமுள்ளவருங்கேட்டுப்
புத்திரன்றன்னைக்கொல்லப் பூண்பரோவிரோதமென்று
பெத்ததாயலப்பேயென்று பேசுவாரேசுவாரே.
பல்லவி.
ஏண்டியிப்படிநீதான்
தூண்டிபோலானாயே சுதனுக்குத்துரோகி (ஏண்டி)
க, பெற்றமகன்சுகமா யுற்றால்சந் தோஷம்
மற்றதர்க்கிடர்செய்தால் மகத்தான தோஷம் (ஏண்டி)
௨,தானேபாலடையார்க்குத் தந்தபால் மேலே
பூனைகுடிக்குமென்ற புதுமையைப்போலே (ஏண்டி)
௩,புத்தாம்ரகுராமற் பெற்றதே அருமை
ஹத்திசெய்தால்நரக மனந்தமாய் வருமே (ஏண்டி)
௪,ஆருவருஷமாய்நீயாருடன் சொன்னாய்
தேரிடஞ்சென்றுதெருவிலே நின்றாய் (ஏண்டி)
௫,தேஞ்சாலிலமுதமாய்க் காஞ்சாலுந் தானே
தாஞ்சாமருந்துண்பரோ தரணியில் மானே (ஏண்டி)
௬,சேயைப்பெற்றபுண்ணியத் தாயென்றரிந்தோமே
மாயன்பேர்சொல்லியமோசப்பேயென்றரிந்தோமே (ஏண்டி)
௭,வஞ்சகிவுனைப்போலே பிரபஞ்சத்திலார்சொல்லாய்
பஞ்சமாபாதகிவுந்தன் நெஞ்சமென்ன கல்லா (ஏண்டி)
௮,ஏதடிவேண்டினாய்குலை பாதகமி தல்லவோ
மாதகிவுன்னையேகொன்றிப்போதுநாங்கள் சொல்லவோ (ஏண்டி)
௯,சற்றுமெம்மையோசியாமல் மேத்தநீ சண்டாளி
முற்றுமகனுக்குறைத்தால் குற்றமல்லோ நீலி (ஏண்டி)
க௦,ஒருமுப்பதின்மேற்பிள்ளை மருவிக் கட்டினையே
இரிகிப்பிச்சையெடுத்து அருகிற்கொட்டினையே (ஏண்டி)
கக,வண்டியினில்மகனைக் கைகொண்டு தருவாயோ அக்கர்
வண்டியினியெப்படிமனங்கொண்டுவருவாயோ (ஏண்டி)
க௨,ஸ்ரீனிவாசனைவேண்டித்திருப்பிக்கொள் சுதனை
மாநிலந்துதிக்குமுன்னைமடந்தை கேளிதனை (ஏண்டி)
விதவிதமாகப்பேசி மெல்லியைவையும்போது
சுதனைநீவண்டிக்கிப்போ துருசுடன்தருவையென்று
முதுமறையோர்கள்யாரும்மொழிந்திட்டார்மொழிந்திட்டாரே.
பல்லவி.
புத்திரனைத்தேர்சக் கரத்திற்றள்ளடீ
ஸ்ரீதரன்பாதத்தை போதினாலுய்கிறாய் (போது)
க, தேரிங்கேநின்று எந்நேரம் உனைக்கண்டு
தேடிப்பிடித்தாரே நீயுங்
கோரினகோரிக்கை யாருந்தெரிந்திடக்
கூறிப்படித்தாரே என்ன
காரியம்நீசும்மா நேரஞ்செய்யாதே கு
மாரனைவண்டியிற் றாராய்நீவாராய் (போது)
௨,சொன்னசொல்மாருவ தென்னமகத்தான
தோஷம்அறியாயோ முன்பு
மன்னரிச்சந்திரன் தன்னிடதேவிக்கு
வந்ததரியாயோ
அன்னத்துடன்மகன் றன்னைகறிசெய்
தரனாற்கருளுந் திரங்கேட்டிலாயோநீ (போது)
௩,ஈசனிரதம் நிலைநின்றுபோஜனம்
எங்களுக்கேவிரதம் ஸ்ரீனி
வாசனுக்கோர்கால பூசையுன்னாலே
பழுவிலென்னசுகிர்தம்
நேசமாய்சொல்லிய ஸ்ரீசனுடமைக்கு
ஆசையினாலேகி லேசப்பட்டேன்சும்மா (போது)
வேதியவொருமிந்த மெல்லியைவையும்போது
காதலன்றன்னைப்பார்த்துக்கண்கணீர்சொரியவார்த்து
ஸ்ரீதராமுகுந்தாவென்று தேம்பிநின்றியம்புவாளே
பல்லவி.
றென்னைநீயா தரியே
ஏழைமீதிலேஉனக்கித்தனைபிடிவாதம் (என்ன)
க,மகனையெப்படிக்கொடுப்பேன் என்வீட்டார்முன்
வந்துஎப்படியடுப்பேன்
வெகுநாட்பிள்ளையில்லாமல் மெலிந்துபெற்றெடுத்தேனே
பகவானேஉனதுதேர்ப்பலிக்கென்றுஅடுத்தேனே (என்ன)
௨, பக்தவச்சனல்லவோ பாறையும்பெண்ணா
யுற்றதுன்பதத்தல்லவோ
பெற்றநான்சொன்ன விபரத்தைநீதீராயோ
புத்திரன்மேல்கிருபை வைத்துநீகாரையோ (என்ன)
௩,கவலைமிகத்தருகுதே மைந்தனைக்கண்டால்
கண்ணீராறாய்ப் பெருகுதே
அவசரப்படிப்புத்தி தவறுமென்பதுபொய்யோ
அடியாள்மேலிப்படி அடஞ்செய்கிறீரையய்யோ (என்ன)
௪,சொன்னபடியேமகனே இதோவந்து
நின்றான்லோகரக்ஷகனே
முன்னொருவரந்தந்தா யெந்தன்குக்ஷிக்காயே
இன்னொருவரமெந்தன் றன்னைரக்ஷிப்பாயே (என்ன)
௫,ஈசாவுனையேநம்பினேன் வேங்கடகிரி
வாசாஉனையேநம்பினேன்
ஆசையுடனே நானன்றுவேண்டிக்கொண்டேன்
மோசஞ்செய்யாதே யின்றுமுன்னேவேண்டிக்கொண்டேன் (என்ன)
மாதுநீசும்மா போதுபோக்காதே
ஸ்ரீதரனுக்கிப் போதுதாசுதனை
(௩௬) விருத்தம்.
விரைவுடனம்மாவென்ன விதமிதுவென்றுகேட்க
சிறுவனேஉனக்குநானித் தேவனைவேண்டமாயன்
உரைப்படிகேட்டானென்னு முரைக்குரைஉரைக்கின்றானே,
கண்ணிகள்.
டேசன்பிரார்த்தனை பேசினதென்னசொல் லன்னையே
௨,உன்னைப்பெறாமுன்னஞ்சொன்னபிரார்த்தனை மைந்தனே
அதுசொன்னாலெவர்களும் நன்றாகவேசுவார்கந்தனே
௩,அப்படிச்சொன்னதிற் றப்பிதமுண்டோசொல்லன்னையே
இப்போதுஎன்னிடஞ் செப்பிடுவாயெந்தனன்னையே
௪, முப்பதின்மேலிந்த சர்பகிரீசனை மைந்தனே உன்னைக்
கெர்ப்பித்துப்பெற்றிடச் செப்பினதொன்றுண்டு கந்தனே
௫,கோறினபிரார்த்தனைப் பேரென்னசொல்லுவாயன்னையே
அதைக்கொடுக்காமலேன்சும்மாய்தடுமாறுகிறாயெந்தனன்னையே
௬,தேரின்வண்டிக்குக் குமாராஉனைத்தரக்கோரினேன் அதை
நேறாய்கொடுக்கவி சாரமுடனேபால்மாறினேன்
௭,கொடுத்ததைக்கேட்கில் அடுத்ததுபகையென்று அன்னையே
நீயுங்கூசியேமனக் கிலேசப்படலாமோ அன்னையே
௮,எடுத்துமுலையுண்ணக்கொடுத்துவளர்த்தயென்பாலனே வுனை
யெப்படித்தேர்வண்டிக் கொப்பிப்பதப்பாவென்பாலனே
௯,சொன்னசொல்மாறுவதென்னமகத்தானதோஷமே அந்தத்
தூயநுடமைக்கு நீயழுதாலென்ன பூஷமே
க௦,உன்னைக்கொடுப்பதற் கென்னமனம்வருமைந்தனே எந்த
ஊருஞ்சிரிக்கவேதூறுக்குள்ளானேனே கந்தனே
கக, மாயனைவேண்டி அநியாயஞ்செய்வார்களோ அன்னையே
ஊரின்வாய்மூட யாருக்குச்சாயும் அதைச்சொல்லாயன்னையே
க௨,தாயென்றுகூப்பிடுவாயேஉனைத்தந்து வாடவோ யாருஞ்
சீயென்றும்பேயென்றும் ஆயாசமாய்சொல்லைத்தேடவோ
க௩,நேயமாயெந்தனை மாயன்பதைத்திடுவாயே அந்த
நித்தன்வர்த்தின்னம் புத்திரனைப்பெறுவாயே
க௪,தாயின்முலையின்னம் நீயும்மறந்தில்லைமைந்தனே உயர்
சாதுக்கள்வார்த்தைகள் ஓதத்தெரிந்ததோ கந்தனே
மாயனார்பதத்திலின்று மகிழ்வுடன்தருவையென்று
வாயினாற்சொல்லுமிந்த மழலைதன்வார்த்தைக்கேட்டுச்
சேயனேஉனக்கேதிந்தத் திடமெனமடந்தைசொல்வாள்.
பல்லவி.
மைந்தனேகிட்டவந்து ஓதடா
இன்றுவிடுவோமென்று மறந்தையே
க,முலைக்குடிமறக்கிலையேகந்தனே இந்ததியானவார்த்தைவிடுத்து
மொழியவெப்படித் தெளிந்தாய்கந்தனே
௨,கலத்திலன்னத்தைக்கலக்கி ஊட்டென்பாய்தொட்டில்தனில்
கணியப்பாடிஎனைநீ யாட்டென்பாய்
௩,அப்பிச்சிகொடுப்பாயென்றலறிடுவாய்என்னையம்மாவென்று
அடிக்கடிமுலைகுடிக்க மலட்டுவாய்
௪,பற்பலவிளையாட்டுமாடுவாய் சிலபாலருடனே
பரிந்துசண்டைபுரிந்துங்கூடுவாய்
௫,அப்பனிடத்தென்றப்பிதஞ்சொல்வையே அவரென்னையதட்டி
அடிக்கமனதுமடிக்குட் புல்வையே
௬,செப்புமழலைவார்த்தைக்கிள்ளையே வேங்கடேசருன்னைத்
தேடிப்பிடித்தாரென்ன கொள்ளையே
௭,அஞ்சுவயதின்பிஞ்சுமதியமே உனக்கிந்தகியான
அறிவுகிடைத்தலரியினுதயமே
௮,பஞ்சபாதகியென்செய்வேன்மகனே உனைத்தேரிற்கொடுத்து
பார்ப்பேனோபழி யேற்பேனோமகனே
௯,அப்பனேயெனதையனே உனைத்தேரிற்கொடுத்து
ஆறவோமனந்தேறவோமகனே
க௦,சொப்பனங்கண்டபோதேதெரிந்தேனே சுதனேஉனக்குத்
துரோகியிவளென்றாகித் திரிந்தேனே
கக,அன்னையெனவென்முன்னேவருவையே உனைவாரியெடுத்து
அணைத்திடையிலிணைக்கப்பெறுவையே
க௨,பன்னகேசன்ரதத்தினடியிலே உனைகொடுக்கமனது
பாயுமோஅநியாயம்படியிலேஇந்தத்துணிவு
குழவியைக்கொடுத்து தொழுதுநீபோடி
பல்லவி.
அழாதேநீசும்மாவாடி யுந்தன்
அழகுமகனைவண்டி யடியினிற்றாடி (அழா)
அனுபல்லவி.
பழிகாரிநீசும்மாபோடி எண்ணிப்
பாராமல்ஏன்வேண்டினாய்நீ நிர்மூடி (அழா)
சரணங்கள்.
கெடுத்தல்நெற்றிக்கேறக்கை விடுத்தாய்
படுக்காளியெனவேபே ரெடுத்தாய் பிள்ளைப்
பாலைக்காச்சிப்பூனைபகருவேன் கொடுத்தாய் (அழா)
௨,சிருவனுடன்மெள்ள நழுகிறாய் இங்கே
சிணுங்கிச்சிணுங்கிச்சும்மா திண்ணைமெழுகிறாய்
உரகசயனனைத் தொழுகுறாய் நீயும்
உரலிற்றலையிட்டோங்கும் உலக்கைக்கழுகிறாய் (அழா)
௩,வண்டிக்கிடுவேனென்று பேசி இங்கே
வந்துகொடுக்கப்பால்மாறுறாய் கூசி
சண்டியாயிருக்கிறாய் சீசீ
தாளாதுமகன்றனைத்தருவாய்நீ தோஷீ (அழா)
பல்லவி.
ஹரியேயென்னசெய்வேன் வேங்கடகிரி
ஹரியேயென்னசெய்வேன்.
அனுபல்லவி.
பரதவிக்கிறேனிப்போபாதகிநானேதுசெய்வேன் ஸ்ரீதரனே
க,நானோபழிகாரி மைந்தனுக்கென்
றேனோர்மொழிகூறித் தேனீயானதுநன்றாய்
சேர்த்துக்கொடுப்பதுபோ லானேனானுமிப்போது
ஆரணனே-நாரணனே-பூரணனே (ஹரியே)
௨,மகனையெப்படியெடுப்பேன் ஐயய்யோதேரின்
வண்டிக்கெப்படிக்கொடுப்பேன் ஜகத்திலவர்தான்பெற்ற
செல்வனைக்கொடுப்பார்கள் வகையறியாமற்போனேன்
மச்சவனே கச்சபனே அச்சுதனே (ஹரியே)
௩,சிறுவன்றனைவிடுவாய் அதற்கென்மேலுன்
றேர்நீநடத்திடுவாய் அரிவை நானிதோவண்டி
யடியிற்படுத்திடுறேன் கருணைகொடுத்தருளுங்
கருப்பதியே மருட்பதியே திருப்பதிவாழ் (ஹரியே)
அண்ணலேயுனக்குச்சொன்ன அரியபிரார்த்தனைக்கிப்போது
எண்ணமிட்டென்னசெய்வேன் எனதுமேலிரதமோட்டிக்
கண்மணிப்பாலன்றன்னைக் காரெனநாரிசொல்வாள்
பல்லவி.
கந்தனைக்கேட்காதே யெந்தனைக்கொடுக்கிறேன்
கருணைசெய்வாய் (ஹரியே)
அனுபல்லவி.
தந்துயிர்தரிப்பேனோ தயைநீசெய்மாயனே (கந்த)
க,முந்திக்கொடுத்ததைப் பிந்திக்கேட்பாரிந்த
மூவுலகிலுமில்லையே ஆண்டோர்
முப்பதில்நான்சொன்ன தப்பிதப்பிரார்த்தனை
மூடற்குமொப்பில்லையே நானும்
வந்தியாயின்ன மிருந்தாலுமித்தனை
வாதைக்கிடமுமில்லையே அய்யா
மாயனேநீமும்சஹாயஞ்செய்திப்போ
வழக்கிடலென்தொல்லையே பல
அந்தணர்வந்தெனையடுக்கிறார் அவர்
ஆளுக்கோர்சொல்லாகத்தொடுக்கிறார் பெற்ற
கந்தனைக்கையிலே யெடுக்கிறார்வண்டிக்
காலுக்குத்தாங்களே கொடுக்கிறார்களாம் (கந்த)
௨,கைப்பிடித்தென்னைக் கவரும்புருஷன்
கனிந்துறவாடுவானோ யெந்தக்
காலமும்தொண்டுதொணை சொல்லுமாமியைக்
கண்டுதள்ளாடுவேனோ வேத
விற்பனவாமனார் வேண்டும்பணிவிடை
வேலைக்குத்தேடுவானோ இந்த
மேதினியோர்மஹா பாதகியென்றே
விளம்பிடவாடுவேனோ எந்தன்
அப்பன்மகனைக் கேளாதே என்னை
யாகிலுந்தாரேனிப் போதே நல்ல
சர்ப்பகிரியிதின் மீதே யேதுஞ்
சர்ப்பனைசெய்ய லாகாதேசாமி (கந்த)
௩,எத்தனையானாலும் புத்திரனுக்கிடர்
யார்தான்செய்து சகிப்பாரையா உனை
எண்ணியேநற்றுதி பண்ணியபேர்கட்
கிடர்செய்தால்யார்சுகிப்பாரையா லோக
கர்த்தனாகும்நீயே பத்தருக்கிரங்கிடும் யாவுங்
காரணம்யெவர்வகிப்பாரையா
காப்பவனுனையன்றி வேறுண்டெனச்சொல்லிக்
காட்டியெவர் ஜயிப்பாரையா என்மேல்
சித்திரத்தேர்தன்னை யோட்டுவாய் எந்தன்
செல்வன்மேல்நீகிருபை சூட்டுவாய் புகழ்
எத்திசைக்கும்நிலை காட்டுவாய் வேங்க
டேசனென்றெங்கும்பா ராட்டுவாய் சாமி (கந்த)
தண்ணீரெனவே நண்ணியபேருக்
கெண்ணேயோதருவாய் பெண்ணேநீசொல்வாய்
(௩௬) தரு-ராகம்-செஞ்சுருட்டி-தாளம்-ஆதி.
பல்லவி.
வண்டியிற்கொடுக்கிறேன் சண்டாளியெடுக்கிறேன் (வாடா)
சே ஷாசலனுடனே கூடநீவிளையாட (வாடா)
க,அப்பாகண்மணியே உனைநித்தம்
ஆதரவாய்வளர்த்துப்பாதகியானேனே அப்பா
சொற்பமாய்வேண்டினா லொப்பாறியென்றுன்னைக்
கற்பிக்குமுன்வேண்டினதிப்போ செலுத்துமுன்னே (வா)
௨,நானோபழிகாரிஉனைநித்தமு நன்றாகவேவளர்த்துக்
கொன்றிடவேவிளைத்த நானோபழிகாரி
கூனியாய்முளைத்தேனே ஹானியாய்விளைத்தேனே
மானிலத்தோர்கைதொட்ட தேனீயாகினேன்கிட்ட (வா)
௩,தொட்டிலிட்டாட்டினேனே உனைத்தேர்வண்டிக்
கிட்டவெள்ளாட்டிநானே அப்பாதொட்டி
இஷ்டமகனேவுனை விட்டிங்கேயடுத்திடேன்
கிட்டமற்றொருவண்டிக் கெட்டநான்படுத்திட்டேன் (வா)
ஹரிதிருரதத்தின்வண்டி யருகினில்வந்துநின்று
துருசுடனிலத்தில்பெற்ற சுதனையும்படுக்கவைத்து
மருவலதண்டிதன்னில் வந்துதான்படுத்திட்டாளே
பல்லவி.
ஹரியேநீவருவாய் உன்பிரார்த்தனை
யானைதைப்பெறுவாய்
அனுபல்லவி.
பேதையேதோசொன்ன பேச்சாலெடுத்தாயே
பிரியமுடனென் தருமமகன்மிசை
யிரதம்நடத்துவை வரதவேங்கட (ஹரியே)
க,முப்பதின்மேலே பிள்ளையைப்பெற்றே
னப்பாஉன்னாலே
அப்புதல்வனையுனக் கொப்பிப்பேனெனுஞ்சொல்லை
மெப்பித்துக்கேட்கிறாய் தப்பிதமுனக்கில்லை
விதனமெனக்கென்ன சுதனையுனக்கென்ன
மதியில்நினைத்ததே சதியாய்முடிந்தது (ஹரியே)
௨,மைந்தனைக்கொடுத்தேன் நானும் மறு
வண்டியிற்படுத்தேன்
ஐந்துவருஷமாய்நான் தந்திடாதிருந்ததுக்
கெந்தனைவண்டியா யிந்தாமுகுந்தனே
இரதமதையதி துரிதமுடனெம
திருவர்மிசையிலும் வரவும் நடத்திக்கொண்டு (ஹரியே)
௩,ஹரியேஉன்பாதம் வணங்கத் தந்
தருளும் பிரசாதம்
சிறுவனைத்தேரிலே செலுத்தெனப்பிடிவாதஞ்
செய்தீரென்னையுங்கூடச் சேர்க்கில்மிகவினோதம்
தீனரக்ஷக ஞானதக்ஷக
ஸ்ரீனிவாசஜ நார்த்தனோத்தம (ஹரியே)
௪,மகவரங்கொடுத்தாய் ஹடஞ்செய்தின்று
வாங்கியேவிடுத்தாய்
லகுவாயின்னொருவரம் நீகொடுத்திடுமெய்யா
நெடுந்தேர்கனத்திடாமல் நீநடத்திடுமெய்யா
நீலமேகவி சாலதேஹனே
நீரஜாக்ஷகம் பீரவேங்கட (ஹரியே)
பொங்கமாய்ச்செய்துபெற்ற புதல்வனுந்தானுமாக
அங்குளரதத்தின்வண்டி யடிதனிற்படுத்தாளப்போ
வேங்கடரமணன்றேரை விடுத்திட்டார்நடத்திட்டாரே,
பல்லவி
அதிசயமிது வதிசயமெனவேரத
அனுபல்லவி.
பாரிலுள்ளபல பத்தர்கொண்டாடவும் (அதிசய)
க, தோத்திரஞ்செயுமிவள் வார்த்தையைக்கேட்டுச்சந்
சந்தோஷம்மனதில் நாட்டி அதி
துரிதமுடனேயிந்தத் திருமகனையெடுக்குந்
தோகையெனக்கை நீட்டிப்
பார்த்திடும்மடவி மகனையெனகாட்டிடப்
பார்ப்பதெனவேதலை யணைகள்முன்பாட்டிட (அதிசய)
௨,மடைந்தையொருவண்டியில் மகனொருவண்டியில்
வந்துஅவர்படுக்கவே சதுர்
மறையவர்விரைவொடு ஹரியேவருவையென
வடத்தைக்கையிலெடுக் கவே
சரிசரியினியிதோ வருகிறோமெனச்சொல்லி
தலையையசைக்குதெனத் தரணியேவரும்புல்லி (அதிசய)
௩,அசையுதுரதமினி விசைகொடுவிழுமென
அரசரதட்டிவரவே மிகு
புஜவலியுடையவர் கஜமுடன்சன்னியைப்
பூட்டித்தள்ளிக்கொண் டுறவே
புஜசயனன்செய்த புதுமைநானென்னசொல்லத்
திருஜகமகிழுமந்தத்தேரும் பின்னுக்குச்செல்ல (அதிசய)
கந்தார்த்தம் இராகம் மோகனம்.
தேர்பின்னடந்திது யாருந்தெரிந்திதென
தேவாவெனப்பரவியே
நேருஞ்சிரங்கள்மிசை தோருங்கரங்கள் கூவுய்ப்
பாரும்நிறைந்தஹரரீ
குரூரஞ்செயாதுகிருப தாரும் உமக்கென
கோபம்யெனப்ப ரவியெல்
லோரும்வணங்கமஹமேருந்திரும்பியதென்
றிரதம் நடந்துவருதே,
(௩௯)தரு-ராகம்-மோஹனம்-அடதாளச்சாப்பு
பல்லவி.
விரதம்முடிந்துவருவதே
ஹரியேயெனவும்நல்ல பெரியோர்களுமேசொல்ல (இரதம்)
அடமேவிளைத்திந்த மடவாளுடன்மகனை
யணிதேரின்வண்டி யடியில்
வளர்வேங்கடாசல மஹாமூர்த்திவாங்கியபின்
மனதுசந்தோஷமாகி
வடமேபிடித்தவர்கள் நடமேபிடித்திட்டம்
மருள்தந்து பின்னகர்ந்து
குடமாமுலைச்சியொடுகுமாரன்றனைத்தாண்டி
குதித்து இரதம்நடந்ததே
(௪௦) வது-தரு-ராகம்-மோஹனம்-அடதாளசாப்பு
பல்லவி.
பதித்தேரதங்கடந்ததே
துதித்தார்புஷ்பவருஷம் இதிர்த்தார்சந்தோஷங்கொண்டு (குதித்தே)
ஹரிதாசர்பிரியாத திருநாமமேபஜனை
யவர்செயுங்கோஷ மொருபால்
ஸ்வரதாளமேளகின் னரிமத்தளங்களொடு
சுருதிகீத கோஷமொருபால
பெரிதானபேரியக் காளைபூரிநாகாரி
பிரியாதகோஷமொருபால்
குரையாழியெனவதிர கோவிந்தனிரதமிது
குடுகுடெனவே நடந்ததே
(௪க) வது-தரு-ராகம்-மோஹனம்-அடதாளசாப்பு
பல்லவி.
குடுகுடெனநடந்ததே தாயைமகனை
யெடுயெடெனக்கடந்ததே
அனுபல்லவி.
திடுதிடெனப்புகன்று நெடுவீதிதனிற்சென் (குடுகு)
சண்டமாருதமுட னிருண்டமேகங்கள்பல
சார்ந்ததெனவே தரணியோர்
கண்டவர்வெருண்டிடவே வண்டிகளுருண்டுவரு
காரணமிகுந் தூளிகள்
எண்டிசைகளும்நிறைய வண்டர்களெலாம்பரிய
வெவருமிவர் மஹிமைதெரியத்
தண்டுளவணிந்திடுவை குண்டநிரதம்நிலையிற்
றானேதழையச் சென்றதே
(௪௨) வது-தரு-ராகம்-மோஹனம்-அடதாளசாப்பு
பல்லவி.
தானேநிலையில் நின்றதே
வானோர்புஷ்பவருஷந் தானேசொரிந்தாரங்கே (தானே)
திருவேங்கடேசனிறு தேர்வந்துநிலைநின்ற
செயலரிந்தார் ஜகமுளோர்
ஒருமாதுபெருயாது சிறுபாலனிவர்மீது
உயர்தேர் நடந்தபடியால்
வருபோதவர்கள்செய்தி தெரியாதெனச்சகல
மானுஷோத்தமர் தேடவே
மருவேதுமில்லாது சிறுவனுடனேயழகு
மயிலாளெழுந்து வருவாள்.
(௪௩) வது-தரு-ராகம்-மோஹனம்-அடதாளசாப்பு
பல்லவி.
மயிலாள்எழுந்துவருவாள் மைந்தனைக்கட்டி
மார்போடணைத்துப் பெருவாள்
அயிலார்விழியாள்மாயன் அருளைப்புகழ்ந்துபாடி
இயலாயின்றுனைபெற்று யெடுத்தேனெனக்கொண்டாடி (மயி)
பாலனேஉனைநானிந்தப் பதுமநாபன்தேர்வண்டிக்
காலிலேதந்தேனன்றோ கண்மணிமகனேயெந்தன்
பாலிலேருனக்குப்பக்ஷம் பரியுடனுளதோவென்று
சாலவேமகனைநன்றாய்ச்சாற்றுவாள் தேற்றுவாளே.
பல்லவி.
அப்பனேவாடா கண்மணியேநீ
யப்பனேவாடா
அனுபல்லவி.
அப்பனேவுனைநானே சர்ப்பனைசெய்தேனே
துற்புத்திபதித்தவென்கெர்ப்பத்திலுதித்தவென (அப்பனே )
சரணங்கள்.
க,வண்டிக்காலிலேவுன்னைக் கொண்டுபோய்க்கொடுத்தேனே
சண்டாளியெனவேபேர் கொண்டுவந்தெடுத்தேனே (அப்பனே)
௨,அன்னையெனவேகிட்ட நின்னாயேயுனதிஷ்டப்
பன்னகேசன்றந்திட்டபொன்னேநான்வளர்த்திட்ட (அப்பனே)
௩,பெற்றவளுனைக்கொல்லப்பேய்போலே அடுத்தேனே
பக்தவச்சலன் கிருபைபார்த்தும்பேரெடுத்தேனே (அப்பனே)
௪,கன்னஞ் சிவளென்றென்னனைக் காட்டினார் ஹரிதானே
என்னுடனுனைப்பெற்ற தின்றிந்தகிரிதானே (அப்பனே)
௫,ஸ்ரீநிவாசனை மறந்தேன் முன்புசிக்ஷித்தார்
மாநிலத்துதிக்கவே மைந்தாநம்மைரக்ஷித்தார் (அப்பனே)
மைந்தனையிடையில்வைத் துமாமயில்தருமசீலை
வந்துமாதவனைவாழ்த்திமணவாளன்மாமன்மாமி
முந்தவேமூர்ச்சையான மூவரையெழுப்பவென்று
வந்தனைசெய்துபின்னும்வசனிப்பாள் பஜனிப்பாளே.
பல்லவி.
துணைவாராய் ஹரியே
கருணைதாராய்
மணமிகுதுளசீ மார்பசிங்காரா
பனிமலையுடையபஞ் சாயுதசூரா
க,பங்கஜநயனா பன்னகசயனா
வேங்கடரமணவி நோதநல்வயனா
மங்களதேஹா வளரும்வைபோகா
எங்கனும்வளர்ந்திடும் ஏகவனேகா (துணை)
௨,ஹரிநாராயண துரிதநிவாரண
சரிமுறையிடவந்து காத்தருண்மாயா
சிறியளிடத்தருள் செய்துசந்ததியைப்
பிரியமுடன்கொடுத்தருள் பெருகுஞ்சஹாயா (துணை)
௩,சுதனைவுனதுதிரு ரதத்தின்வண்டியிற்றா
மதனமாய்வேண்டின முதலைச்செலுத்தென்றன்னை
விதனப்படுத்திரத மதனையெமதிருவர்
முதுகில்நடத்தியவச் சுதனைமாதவனை (துணை)
௪,பயத்தைக்கொடுத்துப்பின்னப் பயத்தைக்கெடுத்துடன் அ
பயத்தைக்கொடுத்துப்பாதம் பயத்தைக் கொடுப்பவனே
நயத்திலுனையன்பரி தயத்திற்றுதிக்க ஐசுவ
ரியாத்தைக்கொடுத்தருளும் நித்தியமூர்த்தி (துணை)
௫,வாசவனொடுசுரர் பூசனைபுரிந்திடும்
ஈசனேதிருப்பதி வாசவிலாசனை
தாசர்கள்துதித்திடும் நேசனே அதிகவுல்
லாசனேஹரிஸ்ரீநி வாசன்நீதானே (துணை)
பதிவிரதைஹரியைப்போற்றிப் பரவியேநிற்கும்போது
முதுமறையவன்றாய்தந்தை மூவரும்மூர்ச்சைநீங்கிச்
சதனொடுந்தாயைக்காணத் துருவியேவருகும்போது
நிதிகிடைத்ததுபோற்கண்டு நேசித்தார் பாஷித்தாரே.
பல்லவி.
அப்பனேமகனே கண்மணியே உனக்
கொப்பாருலகிலுண்டோஉயர்ந்தநன் மணியே (அப்ப)
சர்ப்பக்கிரியோன்றந்த மணியே தேரின்
சக்கரமோவுனக்குத்தந்தோம்பொற் பணியே (அப்ப)
க,உன்னைப்பெறக்கோரிக்கை செய்தோம் இந்த
உரகேசனைமறந்து வுனக்குநோய் செய்தோம்
அன்னைசொன்னதை கேட்டுவைதோம் உன்னை
ஹரியெழுப்பவே நாங்களனைவரும் உய்தோம் (அப்ப)
௨,கங்கையைப்படைத்த பொற்காலன் நம்மைக்
காத்துரக்ஷித்தனர் கருணைவிசாலன்
வேங்கடரமணகோபாலன ருள்
விளைந்தவனேயென்றுந் தழைநீயென்பாலன் (அப்ப)
பாலனைவாழ்த்தியந்தப் பத்தினிதனையுந்தேற்றி
ஞாலமோரடியாச்செய்த நாதனைப்புகழ்ந்துபோற்றி
பாலனுந்தாயுந்தந்தை பாட்டனும் பாட்டியாள்கோ
பாலனைவலமாய்வந்துபாடினார்கூடினாரே.
அங்குளபெரியோரெல்லாம் அவர்முதுகதனில்வாழுந்
தங்கியவடையாளத்தை ஸகலருமறிந்துகீர்த்தி
பொங்கியவேங்கடேசன் பொற்பதமதனைவாழ்த்தி
சங்கையில்லாமற்பாடித் தியானித்தார்தியானித்தாரே.
பல்லவி.
தேவதேவனேஉன் மகிமை
செப்பவெளிதேர் ஸ்ரீநிவாச (தேவ)
மூவர்பரவும் வேங்கடாத்திரி
மூர்த்தியேவளர் கீர்த்திபடைத்த (தேவ)
க,வாரிஜாக்ஷனே நந்தகு
மாரதுளசீஹாரதார வாரிஜாக்ஷனே
நாரியோடுகு மாரன்முதுகிற்
றேற்நடத்திவுத் தாரமேசெய்த (தேவ)
௨,அண்டர்பதியே உனைத்தொழுந்
தொண்டர்கள்நிதியே நற்கதியே
மண்டலமதை யுண்டருள்கருங்
கொண்டலேவை குண்டவாசத் (தேவ)
௩,வேங்கடரமணா அடியவா
சங்கடசமணா சுகமன
அங்கஜனொடு பங்கஜனைவி
ளங்கவருள்பு ஜங்கசயன (தேவ)
இப்படிமறையோர்வேங்க டேசனைத்துதித்துப்போற்றி
மைப்பொலிகுழலாள்தரும சீலையைமகனைப்பார்த்துக்
கற்புடையவளேஉண்போற் காசினிதனிலாரென்று
செப்பியே அவளைநன்றாய்த் தோத்திரஞ்செய்குவாரே.
பல்லவி.
பதிவிருதைநீயே மகாவிஷ்ணு
பத்தனுன்சேறே (பதி )
அனுபல்லவி.
ரதியும்புகழ்கொள்சந்திர மதியும்உனக்குநேரோ
துதிகொள்பூமியிலருந் ததிவேறுநினைப்பாரோ (பதி)
க,கலியுகத்தினிலே நீயேபலங்
கண்டாய் கைதனிலே
சலியாமல்நீசெய்த தவமின்றுபலித்ததே
சாமிவேங்கடேசன் றனதருள்ஜொலித்ததே (பதி)
௨,மகனைப்பெற்றெடுத்தாய் தேர்வண்டியில்
வைத்துநீ கடுத்தாய்
இகத்திற்கொடுக்குந்தெய்வ மிவரென்றறியத்தான்
ஈசன்றேரிருவர்மே லெளியநடத்தினானே (பதி)
௩,இந்தநற்கதையைப் படித்துக்கேட்போர்க்
கெவர் தான் சமதையே
சந்ததிதன தானிய சம்பத்துக்கள் தருவார்
சாமிவேங்கடேசன் றனதுபதந்தருவார் (பதி)
பூசுரரெவருமிந்தப் பூவையைப்புதல்வனைப்பார்த்
தாசிசொன்னாரப்போ தந்தணன்றகப்பன்றாயார்
மாசிலாத்தர்மசீலை மைந்தனுமாகக்கூடி
ஸ்ரீசனைவலமாய்வந்து திருநகர்சேர்ந்தாரன்றே.
பல்லவி.
ஈசனித்துதித்தாரே வேங்கடகிரி
வாசனைத்துதித்தாரே
அனுபல்லவி.
ஈசனிவைகுண்ட வாசனைபக்தர்கள்
கேசனைவளர்ஸ்ரீநி வாசனைப்பணிந்துகொண்டு (ஈச)
க,தீர்த்தமெவையுமாடினார் ஹரியைவந்து
சேவித்துக்கொண்டாடினார் ஹரிநாமசத்
கீர்த்துமதைப்பாடினார் வலமாகக்
கிரியைச்சுற்றியே கூடினார்
கீர்த்திமருவும்வேங்க டாத்திரிதனிலேவந்து
க்ஷேத்திரமாகுஞ் சே ஷாத்திரிதனிலே வந்து (ஈச)
௨,ஏழுமலையைத்துதித்தே கோவிந்தராஜர்
இருக்கும்பட்டணமதித்தே அங்கேயொரு
நான்முழுதும்வசித்தே அலர்மேலு
நாயகிதாள்கதித்தே விளங்கிடும்
வாழ்விழியவயளையும் வந்திப்பணிந்தாரே
நாளும்செழிக்கும்பாக நகரில்நன் கணிந்தாரே (ஈச)
௩,தந்திருப்பதியடுத்தார் மறையோர்க்கன்ன
தானமிகவும்கொடுத்தார் யாத்திரைசெய்த
விந்தையெவையுமுரைத்தார் தருமசீலை
வேண்டல்சொல்லிய ரிறைத்தார்
செந்திருமருவுங்கோ விந்தன் கருணையாலே
வந்தோமெனவேசொல்லி மகிழ்ச்சியுடன்மென்மேலே (ஈச)
ஊரிலுள்ளவருந்தங்களுரவினரெவருமிந்த
நாரியைப்புகழ்ந்துநீதான் நவின்றதும் நளினநாபன்
மீரியுங்களைரக்ஷித்த விதமிதுவெல்லாம்நீவி
ஸ்தாரமாயுரப்பாயென்னைத் தருமசீலையுஞ்சொல்வாளே,
பல்லவி.
என்னசொல்வேனந்தப் பன்னகேசன்கிருபை
தன்னைப்பெரியோர்களே (என்ன)
அனுபல்லவி.
நன்னாவெடுக்குமோ சொன்னாலடக்குமோ (என்ன)
க,மைந்தனில்லாமல் வருந்தியெனக்கு
வயதொருமுப்பது மாச்சு அள
வற்றநதிகள் ஸ்தலங்கள் தெய்வங்களை
வந்தனைசெய்வதென்ன வாச்சு யாருஞ்
சந்தியில்லையென் றெந்தனைக்கண்டவர்
சடையாய்ப்பேசவு மாச்சு ஒரு
ஸத்புருஷன் அன்ன சானத்தைக்கொள்ளாமல்
சாற்றியதாலந்தப் பேச்சு என்னை
வந்தியென்றே யுலகந்தனிற்சொல்வதை
மாற்றவொருநினைப்பாச்சு ஹரி
மலரடிபோற்றிடலாச்சு மனதொடு
மைந்தன்நீதரிலோ ரதசக்
கிரந்தனுக்கிடுவே னெனச்சப
தந்தனைசொல்வோ ஹரியருள
தந்தாரப்பொழுதே அதிசயம் (என்ன)
௨,என்னைமணந்தவர் பொன்னின்பதுமையை
ஈகுவேனென்றவர் கூறினார் அவர்
இஷ்டமிகுந்ததை வேப்பிலையைத்தின்று
ஈசனைக்கண்டிடக் கோறினார் அவர்
பன்னியுந்தொட்டிற் குழவிந்தந்து
பரவேனானென்று றேறினார் எந்தன்
பிரார்த்தனைவேங்கட மூர்த்தியரிந்தொரு
பாலன்தந்தார் வயிற்றூறினான் பிறந்
தன்னன்மகனைத்தொ டுப்பாயென்றேந்தன்
அருங்கனவில்வந்து தூரினார் மாத
மாச்சுப்பத்தென்றுரை மீறினார்கனவினை
யென்னவென்றெளியேன் இவரோடு
சொன்னவின்றிடுவேன் ஹரிபதந்
தன்னையேதொழுதேன் ஹரிகிருபை
பின்னுமப்பொழுதே தந்தனா (என்ன)
௩,மைந்தன் அழகு குணமுமறுந்தந்த
மாயனை நான்மெத்த மறந்தேன் ஐந்து
வச்சரமாக வயிறுவலிகொண்டு
மகன் அழநான் பரப்பறந்தேன் பல
அந்தணர்சொல்ல வறிந்துபதியொடு
யாத்திரைசெய்யவுஞ் சிறந்தேன் ஹரிக்
கற்பிதமாயவர் செப்பினதைத்தர
யான்கொடுக்காமலே கரந்தேன் ஹரி
வந்தணர்தேரிலே நின்றனரப்போ
மறையோர் துதிக்கமெய் மறந்தேன் யருள்
வந்தோர்பிடிக்கவு மிருந்தேன் குமாரனை
வண்டியிற்கொடுத்தேன் நான்மறு
வண்டியிற்படுத்தேன் ரதம்மலர்
செண்டுபோலவுமே நடத்தினர்
அண்டர்நாயகனே இன்னமும் (என்ன)
உறாவினரெவர்க்குமிவ்வா றேதியதருமசீலைச்
சிறுவனும்பதியும்நன்றாய்ச் செல்வமேமிகுந்து வாழ்ந்தார்
ஹரிகதையதனைப்பாரில் அறிந்தவர்கேட்டபேர்கள்
சருவசௌக்கியம்பெற்றுத் தரணியில்வாழ்கமாதோ.
(௫௭) விருத்தம்.
ஸ்ரீதரன்வாழிவாழி திருப்பதிமலையிவாழி
மாதெனுந்தருமசீலை மைந்தனும்பதியும்வாழி
வேதியன் சுப்பராயன் விளம்பிய தமிழின்வண்டிக்
காதையைபடிப்போர் கேட்போர்கருத்துடன்பதித்தோர்வாழி.
--------------------------
பாயிரத்தில் அச்சிட்டிருக்கும் மங்களத்தை இங்கும்
பாடிக்கொள்ளவும்.
ஸ்ரீவேங்கடேசுவராய மங்களம்.
---------------------------------
வண்டிக்கால் சரித்திரகீர்த்தனம்.
முற்றிற்று.
--------------------------
தருக்கள் -௫௦
பாயிரத்தில்.
விருத்தம் - க௩
தருக்கள் - க௮
மொத்தம்.
விருத்தம் - ௭௦
பாவினம் - க௩௮
-----------------
